Verse 1ஸ்வாமியே நான் எத்தனை
பாவ பாதகங்களை
செய்து வந்தேன் என்று நீர்
நன்றாய்த் தூண்டிக் காட்டுவீர்.
Verse 2ஐயோ! பாவ தோஷத்தால்
கெட்டுப்போனேன் ஆதலால்
நித்தம் வாடி நோகிறேன்
துக்கத்தால் திகைக்கிறேன்.
Verse 3நெஞ்சு என்னைக் குத்தவும்
துன்பம் துயர் மிஞ்சவும்
ஆவியும் கலங்கிற்றே
கண்ணீர் பாய்ந்து ஓடிற்றே.
Verse 4வெட்கம் கொண்ட அடியேன்
துக்கமுள்ளோனாய் வந்தேன்
ஸ்வாமி என்னைச் சாலவும்
தேற்றி மன்னித்தருளும்.
Verse 1swamiye naan eththanai
paava paathakangalai
seithu vanthen endru neer
nandraayth thoondik kaattuveer.
Verse 2aiyo! paava doshaththaal
kettupponen aathalaal
niththam vaadi nokiren
thukkaththaal thigaikkiren.
Verse 3nenju ennaik kuththavum
thunbam thuyar minjavum
aaviyum kalangittre
kanneer paainthu odittre.
Verse 4vetkam konda adiyen
thukkamullonaay vanthen
swami ennaich saalavum
thetri manniththarulum.
Download Song