தாழ்விலிருந்து கூப்பிடும்
என் சத்தங் கேட்டன்பாக
என் அழுகை அனைத்துக்கும்
செவி கொடுப்பீராக;
கர்த்தாவே பாவக் குற்றத்தை
நீர் மன்னியாமல் நீதியைப்
பார்த்தால் யார் நிற்கக்கூடும்.
நான் கர்த்தரைக் கண்ணோக்குவேன்
என் புண்ணியம் அவத்தம்;
தெய்வன்பையே நான் நம்புவேன்;
அதற்கு வாக்குத்தத்தம்
மெய்யான வேதவார்த்தையில்
உண்டாமே நான் என்மனத்தில்
அதற்குக் காத்திருப்பேன்.
Verse 4
ராச்சாமங் காப்பவர் எப்போ
விடியும் என்பதாக
நிற்க என் மனமே நீயோ
அதிக ஆவலாகக்
கர்த்தாவை நோக்கிக்காத்திரு;
ஆ இஸ்ரவேலே ஸ்வாமிக்குக்
காத்தே இரு ரட்சிப்பார்.
Verse 5
என் பாவம் பெரிதாகிலும்
தெய்வன் பதிகமாமே;
கேடெத்தனை பெருகியும்;
மீட்பதற்கும் பெரிதே
ஆ இஸ்ரவேலின் பாவங்கள்
அதைத்தும் நீக்கும் மீட்குதல்
கர்த்தாவினாலே ஆகும்.
Verse 1
thaazhvilirunthu koopidum
en saththang kettenbaaga
en azhugai anaiththukkum
sevi koduppeeraga;
karththaave paavak kutraththai
neer manniyaamal neethiyai
paarththaal yaar nirkakkoodum.