Thagamullavan Mel Thaneerai
Verse 1தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுவேன் என்றீர்
வறண்ட நிலத்தில் ஆறுகளை ஊற்றுவேன் என்றீர்
ஊற்றும் ஐயா உம் வல்லமையை
தாகத்தோடு காத்திருக்கிறேன் - நான்
Verse 2மாம்சமான யாவர்மேலும் ஊற்ற வேண்டுமே
மக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே
Verse 3முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமே
கனவுகள் காட்சிகள் காணவேண்டுமே
Verse 4நீரோடை அருகிலுள்ள மரங்களைப் போல
நித்தமும் தவறாமல் கனி தர வேண்டும்
Verse 5புதிய கூர்மையான கருவியாகணும்
பு மியெங்கும் சுவைதரும் உப்பாகணும்
Verse 6கல்லான இதயத்தை எடுத்திட வேண்டும்
சதையான இதயத்தைப் பொருத்திட வேண்டும்
Verse 7வனாந்தரம் செழிப்பான தோட்டமாகணும்
வயல்வெளி அடர்ந்த காடாகணும்
Verse 8நீதியும் நேர்மையும் தழைக்க வேண்டுமே
நல்வாழ்வும் நம்பிக்கையும் வளரவேண்டுமே
Verse 9தூய நீரை எங்கள் மேல் தெளித்திட வேண்டும்
எல்லாவித அசுத்தங்கள் நீங்கிட வேண்டும்
Verse 1thaagamullavan mel thanneerai ootruven endreer
varanda nilaththil aarugalai ootruven endreer
ootrum aiyaa um vallamaiyai
thaagaththodu kaaththirukkiren - naan
Verse 2maamsamaana yaavarmelum ootra vendume
makkalellaam iraivaakku uraikka vendume
Verse 3muthiyor melum ilainjar melum ootra vendume
kanavugal kaatchigal kaanavendume
Verse 4neerodai arugilulla marangalaip pola
niththamum thavaraamal kani thara vendum
Verse 5puthiya koormaiaana karuviyaaganum
bhoomiyengum suvaitharum uppaaganum
Verse 6kallaana idhayaththai eduththida vendum
sadhaiyaana idhayaththaip poruththida vendum
Verse 7vanaantharam sezhippaana thottamaaganum
vayalveli adarntha kaadaaganum
Verse 8needhiyum nermaiyum thazhaikka vendume
nalvaazhvum nambikkaiyum valaravendume
Verse 9thooya neerai engal mel theliththida vendum
ellaavidha asuththangal neengida vendum
Download Song