Thanneergalai kadakum pothu
Verse 1தண்ணீர்கள் கடக்கும் போது
என்னோடு இருக்கின்றீர்
அக்கினியில் நடக்கும் போது
கூடவே வருகின்றீர்...
மூழ்கிப் போவதில்லை - நான்
எரிந்து போவதில்லை (2)
Verse 2என் மேல் அன்பு கூர்ந்து
எனக்காய் இரத்தம் சிந்தி
என் பாவம் கழுவி விட்டீரே
எனக்கு விடுதலை தந்து விட்டீரே
நன்றி ஐயா நன்றி ஐயா
Verse 3உமது பார்வையிலே
விலையேறப் பெற்றவன்(ள்) நான்
மதிப்பிற்கு உரியவன் நானே... இன்று
மகிழ்வுடன் நடனமாடுவேன்
Verse 4பாலைவன வாழ்க்கையிலே
பாதைகள் காணச் செய்தீர்
ஆறுகள் ஓடச் செய்தீரே - தினம்
ஆபத்திலே பாடி மகிழச்செய்தீரே
Verse 5பெற்ற தாய் தனது
பிள்ளையை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லையே - உமது
உள்ளங்கையில் பொறித்து வைத்துள்ளீர்
Verse 6என்னை படைத்தவரே
உருவாக்கி மகிழ்ந்தவரே
பெயர் சொல்லி அழைத்துக் கொண்டீரே
உமக்கு உரிமையாக்கிக் கொண்டீரே
Verse 7என்னை மீட்கும்படி
தன்னை பலியாக்கினீர்
எனக்குள்வந்து விட்டீரே
(என்னை) ஆட்கொண்டு நடத்திச்செல்வீரே
Verse 1Thanneergal kadakkum podhu
Ennodu irukkindreer
Akkiniyil nadakkum podhu
Koodave varugindreer...
Mozhgi povadhillai - naan
Erindhu povadhillai (2)
Verse 2En mel anbu koorndhu
Enakkaai ratham sindhi
En paavam kazhuvi vitteere
Enakku viduthalai thandhu vitteere
Nandri aiyaa nandri aiyaa
Verse 3Umadhu paarvaiyile
Vilaiyera petravan(l) naan
Madhippirku uriyavan naane... indru
Magizhvidan nadanamaaduven
Verse 4Paalaivana vazhkaiyile
Paadhaigal kaana seidheer
Aarugal odach seidheere - dhinam
Aabathile paadi magizhachcheidheere
Verse 5Petra thaai thanadhu
Pillaiyai marandhaalum
Neer ennai marappadhillaiye - umadhu
Ullangaiyil porithu vaithulleer
Verse 6Ennai padaithavare
Uruvaakki magizhnthavare
Peyar solli azhaiththu kondeere
Umakku urimaiyaakki kondeere
Verse 7Ennai meetkumbadi
Thannai baliyaakkineer
Enakkul vandhu vitteere
(Ennai) aatkondru nadaththichchelveere
Download Song