Verse 1தந்தானைத் துதிப்போமே - திருச்
சபையாரே, கவி - பாடிப்பாடி.
விந்தையாய் நமக்கனந்தனந்தமான,
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் - தந்
Verse 2ஒய்யாரத்துச் சீயோனே - நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
செய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும் - தந்
Verse 3கண்ணாரக் களித்தாயே - நன்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே - தந்
Verse 4சுத்தாங்கத்து நற்சபையே - உனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் - தந்
Verse 5தூரம் திரிந்த சீயோனே - உனைத்
தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி,
ஆரங்கள் ப+ட்டி அலங்கரித்து நினை
அத்தனை மணவாட்டி யாக்கினது என்னை! - தந்
Verse 6சிங்காரக் கன்னிமாரே, - உம்
அலங்காரக் கும்மி அடித்துப் படித்து,
மங்காத உம் மணவாளன் யேசுதனை
வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும் - தந்
Verse 1thandhaanaith thuthippomae - thiruch
sabaiyaarae, kavi - paadippaadi.
vinthaiyaai namakkanaanthananthamaana,
villarkariyathor nanmai mika mikaath - than
Verse 2oyyaaraththuch seeyonae - neeyum
meyyaagak kalikoorndhu naerndhu,
aiyanaesukku nin kaiyaik kooppith thuthi
seykuvaiyae, makizh kolluvaiyae, naamum - than
Verse 3kannaarak kaliththaayae - nanmaik
kaatchiyaik kandu rusiththup pusiththu
ennukkadanggaatha eththanaiyo nanmai
innumunmaer sona maaripor peythumae - than
Verse 4suththaangaththu narsabaiyae - unai
muttaaik kollavae alaindhu thirindhu
saththuk kulainthunaich saththiyaakkath thammin
raththaththaich sinthi eduththae uyir varam - than
Verse 5thooram thirintha seeyonae - unaith
thookkiyeduththuk karaththinilaenthi,
aarangal pootti alangariththu ninai
aththanai manavaatti yaakkinathu ennai! - than
Verse 6singgaarak kannimaarae, - um
alanggaarak kummi adiththup padiththu,
manggaatha um manavaalan yaesuthanai
vaazhththi vaazhththi aeththip paninthidum - than
Download Song