Verse 1தந்தேன் என்னை ஏசுவே
இந்த நேரமே உமக்கே
உந்தனுக்கே ஊழியம் செய்ய
தந்தேன் என்னை தாங்கியருளும்
Verse 2ஜீவ காலம் முழுதும்
தேவ பணி செய்திடுவேன்
ஊரில் கடும் போர் புரிகையில்
காவும் உந்தன் கரந்தனில் வைத்து – தந்தேன்
Verse 3உந்தன் சித்தம் நான் செய்வேன்
எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்
எந்த இடம் எனக்கு கட்டினும்
ஏசுவே அங்கே இதோ போகிறேன் – தந்தேன்
Verse 4ஒன்றுமில்லை நான் ஐயா
உம்மால் அன்றி ஒன்றும் செய்யேன்
அன்று சீடருக்கு அளித்த ஆவியால்
இன்றே அடியேனை நிரப்பும் – தந்தேன்
Verse 5உலகோர் என்னை நெருக்கிப்
பலமாய் யுத்தம் செய்திடினும்
நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
நானிலத்தினில் நாதா வெல்லுவேன் – தந்தேன்
Verse 6கஷ்டம், நஷ்டம் வந்தாலும்
துஷ்டர் கூடி சூழ்ந்திட்டாலும்
அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
அடியேன் உம்மில் அமரச் செய்திடும் – தந்தேன்
Verse 1thanthen ennai yesuvae
intha naeramae umakkae
unthanukkae oozhiyam seyya
thanthen ennai thaangiyarulum
Verse 2jeeva kaalam muzhuthum
thaeva pani seythiduvaen
ooril kadum poar purigaiyil
kaavum unthan karanthanil vaiththu - thanthen
Verse 3unthan siththam naan seyvaen
enthan siththam ozhiththiduvaen
entha idam enakku kattinum
yesuvae anggae itho poagiraen - thanthen
Verse 4ondrumillai naan aiyaa
ummaal andri ondrum seyyaen
andru seedarukku aliththa aaviyaal
indrae adiyenai nirappum - thanthen
Verse 5ulagoar ennai nerukkip
balamaai yuththam seythidinum
nalamaai sarva aayutham poondu
naanilaththinil naathaa velluvaen - thanthen
Verse 6kashtam, nashtam vanthaalum
thushdar koodi soozhnthittaalum
ashtathikkum aalum thaevanae
adiyen ummil amarach seythidum - thanthen
Download Song