Verse 1தேடுங்கள் கண்டடைவீர்
தேவ தேவனின் தூய திருமுகம் காண
தேடிடுவோம் அதிகாலமே
Verse 2சென்ற வாழ்நாளெல்லாம் காத்தார் - எந்த
சேதமும் வந்தணுகாமல்
இந்தப் புதுதினம் கண்டடைய
தந்தனரே தமது கிருபை - தேடுங்கள்
Verse 3நல்ல சுகம் பெலன் தந்து தம்
வல்ல நல் ஆவியும் வெல்ல பிசாசை ஜெயமெடுத்து
சொல்ல தம் அன்பென்னிலே பொழிந்தார்
Verse 4ஊண் உடை தந்தாதரித்து - இந்த
ஊழிய பாதையில் காத்து
கூப்பிடும் வேளை செவிகொடுத்து
கேட்டிடும் யாவையும் ஈந்தனரே - தேடுங்கள்
Verse 5ஜீவனும் உள்ள நாளெல்லாம் - என்
தேவனைக் கீர்த்தனம் பண்ணி
ஓசையுள்ள கைத்தாளத்தோடே
நேசைய்யா இயேசுவை தோத்தரிப்போம் - தேடுங்கள்
Verse 6காலையில் தோத்திரக் கீதம் - இந்த
வேளையில் வேதத்தின் தியானம்
நல்ஜெப தூபம் எனது இன்பம்
நற்கிரியைகளும் செய்துழைப்பேன் -தேடுங்கள்
Verse 7கர்த்தரை நான் எப்பொழுதும் -என்
கண் முன்னில் நிறுத்தி நோக்க
நாள் முழுதும் அவர் பின் நடக்க
நேர்வழி பாதையுங் காட்டிடுவார் - தேடுங்கள்
Verse 1thedungal kandadaiveer
deva devanin thooya thirumugam kaana
thediduvom adhikaalame
Verse 2sendra vaazhnaalellaam kaaththaar - endha
sedhamum vandhanugaamal
indha pudhudhinam kandadaiya
thandhanare thamadhu kirubai - thedungal
Verse 3nalla sugam belan thandhu tham
valla nal aaviyum vella pisaasai jeyameduthu
solla tham anbenile pozhindhaar
Verse 4oon udai thandhaadhariththu - indha
oozhiya paadhaiyil kaaththu
kooppidum velai sevigoduthu
kettidum yaavaiyum eendhanare - thedungal
Verse 5jeevanum ulla naalellaam - en
devanaik keerthanam panni
osaiyulla kaiththaalaththode
nesaiyyaa yesuvai thoththarippom - thedungal
Verse 6kaalaiyil thoththira geetham - indha
velaiyil vedhaththin dhiyaanam
naljeba dhoobam enadhu inbam
narkiriyaihalum seidhuuzhaippen - thedungal
Verse 7karththarai naan eppozhudhum -en
kan munnil niruththi nokka
naal muzhudhum avar pin nadakka
nervazhi paadhaiyung kaattiduvaar - thedungal
Download Song