Theeya Manathai Matra Varum
Verse 1தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே – கன
நேய ஆவியே
Verse 2மாயபாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால் – மிக மாயும்
பாவி நான் – தீய
Verse 3தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே – மருள்
தீர்க்கும், தஞ்சமே – தீய
Verse 4பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடிதான், ஐயா – ஒரு
பாவி நான் ஐயா – தீய
Verse 5ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி இரந்து கெஞ்சவே – தினம்
இதயம் அஞ்சவே – தீய
Verse 6புதிய சிந்தை, புதிய ஆசை புதுப்பித்தாக்கவே – அதைப்
புகழ்ந்து காக்கவே – தீய
Verse 7கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு கீதம் பாடவே – அவர்
கிருபை தேடவே – தீய
Verse 8ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊறி ஜெபித்துப் போற்றவே – மிக
சிறப்பாய் ஏற்றவே – தீய
Verse 9தேவ வசனப் பாலின்மீது தேட்டம் தோன்றவே – மிகு
தெளிவு வேண்டவே – தீய
Verse 1theeya manadhai maatra vaarum, thooya aaviye – kana
neya aaviye
Verse 2maayapaasath thazhundhi vaadi maalunj saavithaal – mika maayum
paavi naan – theeya
Verse 3theemai seyya naaduthendran thirukku nenjame – marul
theerkkum, thanjame – theeya
Verse 4paraththai nokka manam atrene, pathadithaan, aiyaa – oru
paavi naan aiyaa – theeya
Verse 5yekkaththoden meetpait thedi irandhu kenjave – dhinam
idhayam anjave – theeya
Verse 6puthiya sindhai, puthiya aasai pudhuppiththaakkave – adhai
pukazhndhu kaakkave – theeya
Verse 7khiristhu meedhu naattang kondu geetham paadave – avar
kirubai thedave – theeya
Verse 8jebaththin thaagam agaththil oori jebiththup potrave – mika
sirappaai yetrave – theeya
Verse 9deva vasanap paalinmeedhu thettam thondrave – miku
thelivu vendave – theeya
Download Song