Verse 1தெய்வ ஆட்டுக்குட்டியே
லோகத்தாரின் மீட்பரே
உம்மால் மீட்கப்பட்ட நான்
தேவரீர்க்கு அடியான்;
நீர் என் கோட்டை தஞ்சமாம்
ஆர் என் வாழ்வை நீக்கலாம்?
Verse 2உம்மைப் பற்றும் நேசத்தை
உம்மில் வைக்கும் பக்தியை
பேயும் கெட்ட லோகமும்
மூர்க்கமாய் விரோதிக்கும் ;
இன்பம் துன்பம் நித்தமே
கன்னியாக நிற்குமே .
Verse 3கர்த்தரே என் உள்ளத்தில்
அருள் தந்தென் மனதில்
அந்தகாரம் நீங்கிட
அன்பின் தீபம் ஸ்வாலிக்க
ஆவியின் நல ஈவையும்
பூர்த்தியாக அளியும்.
Verse 4எந்த நாழிகையிலே
நீர் வந்தாலும் இயேசுவே
உம்மையே நான் சந்திக்க
கண்ணால் கண்டு களிக்க
நான் விழித்திருக்கவே
நித்தம் ஏவியருளும்
Verse 1Deiva aattukkuttiyae
Logathaarin meetparae
Ummaal meetkappatta naan
Devareerkku adiyaan;
Neer en kottai thanjamaam
Aar en vaazhvai neekkalaam?
Verse 2Ummaip pattum naesaththai
Ummil vaikkum bakthiyai
Paeyum ketta logamum
Moorkkamaai virothikkum;
Inbam thunbam niththamae
Kanniyaaga nirkumae.
Verse 3Karththarae en ullaththil
Arul thanthen manathil
Anthakaaram neengida
Anbin theepam svaalikka
Aaviyin nala eevaiyum
Poorththiyaaga aliyum.
Verse 4Entha naazhigaiyilae
Neer vanthaalum yesuvae
Ummaiyae naan santhikka
Kannaal kandu kalikka
Naan vizhiththirukkavae
Niththam aeviyarulum
Download Song