Verse 1தெய்வன்புதான் மா இனிமை
அதற்கென்றே என் உள்ளத்தை
கொடுத்திருக்கிறேன்
என் மீட்பர் அன்பின் அளவை
அறிவதே என் மகிமை
எப்போது அறிவேன்?
Verse 2பாதாளம் சாவைப் பார்க்கிலும்
அவரின் நேசம் பலமும்
ஆழமுமானதே
பூலோகத்தார் எல்லோருக்கும்
மாட்சிமையுள்ள வானோர்க்கும்
எட்டாததாயிற்றே.
Verse 3தெய்வன்பின் ஆழம் கர்த்தாவே
அளந்துபார்த்தவர் நீரே
அன்பின் பிரவாகத்தை
என் ஏழை நெஞ்சில் ஊற்றிடும்
இதே என் உள்ளம் வாஞ்சிக்கும்
தீராத வாஞ்சனை.
Verse 4உம் திருமுகம் பார்ப்பதும்
உம்மண்டை நித்தம் சேர்வதும்
என் முழு வாஞ்சையாம்
உம் திவ்விய சத்தம் கேட்பது
எனக்கு இன்பம் களிப்பு
என் மோட்ச பாக்கியமாம்.
Verse 1Deivanbudhaan maa inimai
Adharkendre en ullaththai
Koduththirukkiren
En meetpar anbin azhavai
Arivadhe en magimai
Eppodhu ariven?
Verse 2Paathaalam saavaip paarkkilum
Avarin nesam balamum
Aazhamumaanadhe
Boologaththaar ellorukkum
Maatchimaiyulla vaanorukkum
Ettaathathaayitre.
Verse 3Deivanbin aazham karththaave
Azhandhu paarththavar neere
Anbin piravaagaththai
En ezhai nenjil ootridum
Idhe en ullam vaanjikkum
Theeraadha vaanjanai.
Verse 4Um thirumugam paarppadhum
Ummai nindham servadhum
En muzhu vaanjaiyaam
Um dhivviya satham ketpadhu
Enakku inbam kalippu
En motcha baakkiyamaam.
Download Song