Verse 1தெய்வாவி மனவாசராய்
வந்தனல் மூட்டுவீர்;
உம் அடியாரின் உள்ளத்தில்
மா கிரியை செய்குவீர்.
Verse 2நீர் சோதிபோல் பிரகாசித்து
நிர்ப்பந்த ஸ்திதியும்
என் கேடும் காட்டி ஜீவனாம்
மெய்ப் பாதை காண்பியும்.
Verse 3நீர் வான அக்னிபோலவே
துர் ஆசை சிந்தையும்
தீக் குணமும் சுட்டெரிப்பீர்
பொல்லாத செய்கையும்.
Verse 4நற் பனிபோலும் இறங்கும்
இவ்வேற்ற நேரத்தில்;
செழிப்புண்டாகச் செய்திடும்
பாழான நிலத்தில்.
Verse 5புறாவைப்போல சாந்தமாய்
நீர் செட்டை விரிப்பீர்;
மெய்ச் சமாதானம் ஆறுதல்
நற் சீரும் அருள்வீர்.
Verse 1deivaavi manavaasaraai
vandanall moottuveer;
um adiyaarin ullaththil
maa kiriyai seiguveer.
Verse 2neer sothipol pirakaasiththu
nirppantha sthithiyum
en kedum kaatti jeevanaam
meyp paathai kaanbiyum.
Verse 3neer vaana agnipolavae
thur aasaai sinthaiyum
theek kunamum suttedrippeer
pollaatha seikaiyum.
Verse 4nat panipolum irangum
ivvetra naeraththil;
sezhhippundaagach seithidum
paazhaana nilaththil.
Verse 5puraavaippola saanthamaai
neer settai virippeer;
meich samaathaanam aaruthal
nat seerum arulveer.
Download Song