Thiri Muthal Kirupaasananae,
Verse 1திரி முதல் கிருபாசனனே, சரணம்!
ஜெக தல ரட்சக தேவா, சரணம்!
தினம் அனுதினம் சரணம் – கடாட்சி!
தினம் அனுதினம் சரணம் – சருவேசா!
Verse 2நலம் வளர் ஏக திரித்துவா, சரணம்!
நமஸ்கரி உம்பர்கள் நாதா, சரணம்
நம்பினேன் இது தருணம் – தருணம்
நம்பினேன், தினம் சரணம் – சருவேசா!
Verse 3அருவுருவே, அருளரசே, சரணம்!
அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம்!
அதிகுணனே தருணம் – கிரணமொளிர்
அருள் வடிவே சரணம் – சருவேசா!
Verse 4உலகிட மேவிய உனதா, சரணம்
ஓர் கிருபாசன ஒளியே, சரணம்!
ஒளி அருள்வாய், தருணம் – மனுவோர்க்-கு
உத்தமனே, சரணம் – சருவேசா!
Verse 5நித்திய தோத்திர நிமலா, சரணம்!
நிதி இஸ்ரவேலரின் அதிபதி, சரணம்!
நாதா, இது தருணம் – கிருபைக்கொரு
ஆதாரா சரணம் – சருவேசா!
Verse 1thiri mudhal kirubaasanane, saranam!
jega thala ratchaga dhevaa, saranam!
dhinam anudhinam saranam - kadaatchi!
dhinam anudhinam saranam - saruveshaa!
Verse 2nalam valar ega thiriththuvaa, saranam!
namaskari umbargal naadhaa, saranam!
nambinen idhu tharunam - tharunam
nambinen, dhinam saranam - saruveshaa!
Verse 3aruvurruve, arularase, saranam!
andru minru mendrum ullaai saranam!
adhigunane tharunam - kiranmolir
arul vadive saranam - saruveshaa!
Verse 4ulagida meviya unadhaa, saranam
or kirubaasana oliye, saranam!
oli arulvaai, tharunam - manuvork-ku
uththamane, saranam - saruveshaa!
Verse 5niththiya thoththira nimalaa, saranam!
nidhi israavelarin adhipathi, saranam!
naadhaa, idhu tharunam - kirubaikkoru
aadhaaraa saranam - saruveshaa!
Download Song