Verse 1திருச்சபை காத்திருக்க
எந்நாள் நாதா வருவீர்?
எந்நாள் துக்க ரா முடிய
பகல் விடியச் செய்வீர்?
நெல் விளைந்து வாடிப்போக
அறுப்போரும் குறைந்தார்;
சாத்தான் கொள்ளை வைத்துக் கொள்ள
கிறிஸ்து வீணாயோ மாண்டார்?
Verse 2சிஷ்டிக்கெல்லாம் உற்ற செய்தி
கோடாகோடி கேளாரே
யார்தான் கேட்பார் சொல்வார் இன்றி?
நாதா வார்த்தை ஈயுமே;
வார்த்தை ஈயும் சுவிசேஷ
தொனி எங்கும் ஒலித்தும்
எல்லாத் தேசத்தாரும் திவ்விய
மீட்பைக் கேட்க செய்திடும்
Verse 3நீர் தெரிந்தோர் ஈறுகாலம்
ஒன்றாய் சேர்க்கப்படுவார்;
சாத்தான் கட்டப்பட்டுப் பாவம்
மாய கிறிஸ்து ஆளுவார்;
பசி தாகம் நோவு சாவும்
கண்ணீர் யாவும் நீங்கவே
திருச்சபை காத்திருக்கும்
இயேசு ஸ்வாமி வாருமே.
Verse 1Thiruchchabai kaaththirukka
Ennaal naathaa varuveer?
Ennaal thukka raa mudiya
Pagal vidiya seiveer?
Nel vilainthu vaadippoga
Arupporum kurainthaar;
Saaththaan kollai vaiththuk kolla
Kristhu veennaayo maandaar?
Verse 2Sishttikkellaam utra seithi
Kodaakodi kelaare
Yaar thaan ketpaar solvaar indri?
Naathaa vaarththai eeyume;
Vaarththai eeyum suvisesha
Thoni engum oliththum
Ellaath thesaththaarum thivviya
Meetpai ketka seithidum
Verse 3Neer therinthor eerukaalam
Ondraai serkkappaduvaar;
Saaththaan kattappattup paavam
Maaya kristhu aaluvaar;
Pasi thaagam novu saavum
Kanneer yaavum neengave
Thiruchchabai kaaththirukkum
Yesu swaami vaarume.
Download Song