Verse 1திருமுகத் தொளிவற்று; பெருவினைகளில் உற்றுச்
சீர்கெட்ட பாவி ஆனேன்நான்
ஒரு முகமாய் உனதிடம் மனந்திரும்பிட,
ஊக்கம் அருள், பரனே.
Verse 2துரிச்சையினால் என் அசுத்தம் நிறைந்து நல்
சோபிதம் நான் இழந்தேன்பேய்ப்
பரீட்சையினாலும் மயக்கம் அடையும் இப்
பாவிக் கிரங் கையனே.
Verse 3பாதகர் மீதில் பரிதபியாமலும்,
பாவம் பெறாமலும் நீ-சுத்த
நீதியை நோக்கில், உனது சமூகத்தில்
நிற்பவர் ஆர், துய்யனே?
Verse 4தன் புண்ணி யத்தால் எவனும் மன்னிப்புறத்
தக்கவன் இல்லை மெய்யாய்எந்தை!
உன் தயையால் உன் திருச்சுதன் மூலமாய்
உண்டு பொறுப் பெனக்கே.
Verse 5மண்ணையே நோக்கி உழன்று தவிக்கும் என்
வஞ்சக நெஞ்சதனை-நேராய்
விண்ணையே நோக்கிடப் பண், இறைவா; உனை
வேண்டி மன்றாடுகின்றேன்.
Verse 6மாறுபாடான இவ் வேழைக்கிரங்கி நீ
மன்னிப்பருள் வதன்றி,-எனக்
காறுதலாக உனது நல் ஆவியை
அனுக்கிரகித்தாள், பரனே.
Verse 1thirumukath tholivattru; peruvinaigalil uttruch
seergetta paavi aanaan;-naan
oru mukamaai unathidam mananthirumbida,
ookkam arul, parane.
Verse 2thurichchaiyinaal en asuttham nirainthu nal
sobitham naan izhanthen;-peyp
pareetchaiyinaalum mayakkam adaiyum ip
paavik kirang kayane.
Verse 3paathagar meethil parithapiyaamalum,
paavam peraamalum nee-suththa
neethiyai nokkil, unathu samookaththil
nirpavar aar, thuyyane?
Verse 4than punniyaththaal evanum mannippurath
thakkavan illai meiyaai;-enthai!
un thayaiyaal un thiruchchuthan moolamaai
undu porup penakke.
Verse 5mannnaiye nokki uzhanru thavikkum en
vanjaga nenjathanai-neraai
vinnnaiye nokkidap pann, iraivaa; unai
vendi mantraadukinren.
Verse 6maarupaadaana iv vezhaikkirangi nee
mannipparul vathanri,-enak
kaaruthalaaga unathu nal aaviyai
anukkiragiththaal, parane.
Download Song