Thivya Baalan Pirantheere
Verse 1திவ்விய பாலன் பிறந்தீரே
கன்னி மாதா மைந்தன் நீர்
ஏழைக் கோலம் எடுத்தீரே
சர்வ லோகக் கர்த்தன் நீர்.
Verse 2பாவ மாந்தர் மீட்புக்காக
வான மேன்மை துறந்தீர்
திவ்விய பாலா தாழ்மையாக
மண்ணில் தோன்றி ஜெனித்தீர்.
Verse 3லோக ராஜா வாழ்க வாழ்க
செங்கோல் தாங்கும் அரசே!
பூமியெங்கும் ஆள்க ஆள்க
சாந்த பிரபு இயேசுவே!
Verse 4தேவரீரின் ராஜ்யபாரம்
நித்திய காலமுள்ளது
சர்வலோக அதிகாரம்
என்றும் நீங்கமாட்டாது.
Verse 5வல்ல கர்த்தா பணிவோடு
ஏக வாக்காய் போற்றுவோம்
நித்திய தாதா பக்தியோடு
நமஸ்காரம் பண்ணுவோம்.
Verse 6ஸ்தோத்திரம் கர்த்தாதி கர்த்தா
ஞானத்துகெட்டாதவர்
ஸ்தோத்திரம் ராஜாதி ராஜா
ஆதியந்தமற்றவர்.
Verse 1thivviya baalan pirandheerae
kanni maathaa maindhan neer
ezhaik kolam eduththeerae
sarva lokak karthan neer
Verse 2paava maanthar meetpukkaaga
vaana maenmai thurandheer
thivviya baalaa thaazhmaiyaaga
mannnil thondri jenitheer
Verse 3loka raajaa vaazhga vaazhga
sengol thaangum arase!
boomiyengum aalga aalga
saantha pirabu yesuvae!
Verse 4thevareerin raajyabaaram
niththiya kaalamullathu
sarvaloka athikaaram
endrum neenga maattaathu
Verse 5valla karththaa panivodu
aeka vaakkaai pottruvom
niththiya thaathaa bakthiyodu
namaskaaram pannnuvom
Verse 6sthoththiram karththaathi karththaa
gnaanaththukettaathavar
sthoththiram raajaathi raajaa
aathiyanthamattravar
Download Song