Verse 1தூய்மை பெற நாடு; கர்த்தர் பாதமே
நிலைத்தவர் வார்த்தை உட்கொள்ளென்றுமே;
கூடி பக்தரோடு சோர்ந்தோர் தாங்குவாய்
யாவிலுமே தெய்வ தயை நாடுவாய்.
Verse 2தூய்மை பெற நாடு; லோகக் கோஷ்டத்தில்
தனித்திரு நாளும் அவர் பாதத்தில்
யேசுவைப் போலாவாய் நோக்கின் அவரை
பார்ப்போர் உன்னில் காண்பார் அவர் சாயலை.
Verse 3தூய்மை பெற நாடு; கர்த்தர் நடத்த
என்ன நேரிட்டாலும் அவர் பின் செல்ல
இன்பம் துன்பம் நேர்ந்தும் விடாய் அவரை
நோக்கியவர் வாக்கில் வைப்பாய் நம்பிக்கை
Verse 4தூய்மை பெற நாடு; ஆத்மா அமர்ந்து
சிந்தை செய்கை யாவும் அவர்க்குட்பட்டு
அன்பின் ஜீவ ஊற்றைச் சேர்ந்து ருசிக்க
முற்றும் தூய்மையாவாய் விண்ணில் வசிக்க.
Verse 1thooymai pera naadu; karthar paathamae
nilaiththavar vaarththai utkollendrumae;
koodi baktharodu sorndhor thaanguvaai
yaavilumae deiva thayai naaduvaai.
Verse 2thooymai pera naadu; logak koshtaththil
thaniththiru naalum avar paathaththil
yesuvaip polaavaai nokkin avarai
paarppor unnil kaanpaar avar saayalai.
Verse 3thooymai pera naadu; karthar nadaththa
enna naerittaalum avar pin sella
inbam thunbam naerndhum vidaai avarai
nokkiyavar vaakkil vaippaai nambikkai
Verse 4thooymai pera naadu; aathmaa amarnthu
sinthai seigai yaavum avarkkutpattu
anbin jeeva ootraich sernthu rusikka
mutrum thooymaiyaavaai vinnil vasikka.
Download Song