Thooya Devanai Thuthithiduvom
Verse 1தூய தேவனை துதித்திடுவோம்
நேயமாய் நம்மை நடத்தினாரே
ஓயாப்புகழுடன் கீதம் பாடித் தினம்
போற்றியே பணிந்திடுவோம் - அல்லேலூயா
Verse 2கடந்திட்ட நாட்களில் அவர் கரங்;கள்
கனிவுடன் நம்மை அரவணைத்தே
நம் கால்களை கன்மலையின் மேல்
நிறுத்தியே நிதம் நம்மை வழி நடத்தும் - தூய
Verse 3யோர்தானைப் போல் வந்த துன்பங்களை
இயேசுவின் பெலன் கொண்டு கடந்து வந்தோம்
அவர் கரத்தைப் பிடித்துக் கொண்டே
பரிசுத்த பாதையில் நடந்திடுவோம் - தூய
Verse 4கழுகுக்குச் சமமாய் நம் வயது
திரும்பவும் வால வயதாகும்
புது நன்மையால் புது பெலத்தால்
நிரப்பியே நம் வாயும் திருப்தியாகும் - தூய
Verse 5தாவீதுக் கருளின மாகிருபை
தாசராம் நமக்குமே தந்திடுவார்
எலிசாவைப் போல் இருமடங்கு
வல்லமையால் நம்மை அபிஷேகிப்பார் - தூய
Verse 6நலமுடன் நம்மை இதுவரையும்
கர்த்தரின் அருள் என்றும் நிறுத்தியதே
கண்மணிபோல் கடைசி வரை
காத்திடும் கர்த்தரைப் போற்றிடுவோம் - தூய
Verse 1thooya devanai thuthiththiduvom
neyamaai nammai nadaththinaare
oyaappukazhludan geetham paadith thinam
potriye panninthiduvom - alleluuyaa
Verse 2kadanthitta naatkalil avar karangal
kanivudan nammai aravannaiththae
nam kaalkalai kanmalaiyin mel
niruththiye nitham nammai vazhi nadaththum - thooya
Verse 3yorthaanaip pol vantha thunbangalai
yesuvin belan kondu kadanthu vanthom
avar karaththaip pidiththuk konde
parisuththa paathaiyil nadanthiduvom - thooya
Verse 4kazhugukkuch samamaai nam vayathu
thirumbavum vaala vayathaagum
puthu nanmaiyaal puthu belaththaal
nirappiye nam vaayum thirupthiyaagum - thooya
Verse 5thaaveethuk karulina maakirupai
thaasaraam namakkumae thanthiduvaar
elisaavaip pol irumadangu
vallamaiyaal nammai apishegippaar - thooya
Verse 6nalamudan nammai ithuvaraiyum
karththarin arul endrum niruththiyathe
kanmannipol kadaisi varai
kaaththidum karththaraip potriduvom - thooya
Download Song