Verse 1தோத்திரம் பாத்திரனே தேவா
தோத்திரந் துதியுமக்கே
நேத்திரம் போல் முழு ராத்ரியுங்காத்தோய்
நித்தியம் துதியுமக்கே
Verse 2சத்துரு பயங்களின்றி -நல்ல
நித்திரை செய்ய எமை
பத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியே
சுற்றிலுங் கோட்டையானாய்
Verse 3விடிந்திருள் ஏகும்வரை -கண்ணின்
விழிகளை மூடாமல்
துடி கொள் தாய்போல் படிமிசை எமது
துணை எனக் காத்தவனே
Verse 4காரிருள் அகன்றிடவே -நல்ல
கதிரொளி திகழ்ந்திடவே
பாரிதைப் புரட்டி உருளச் செய் தேகன
பாங்கு சீராக்கி வைத்தாய்
Verse 5இன்றைத் தினமிதிலும் -தொழில்
எந்தெந்த வகைகளிலும்
உன் திரு மறைப்படி ஒழுகிட எமக்கருள்
ஊன்றியே காத்துக் கொள்வாய்
Verse 1thoththiram paaththirane thevaa
thoththiran thuthiyumakke
naeththiram pol muzhu raaththiriyungaaththoy
niththiyam thuthiyumakke
Verse 2saththuru payangalinri - nalla
niththirai seyya emai
paththiramaaychchee raatti urakkiye
sutrilung kottaiyaanaay
Verse 3vidinthirul aekumvarai - kannnin
vizhigalai moodaamal
thudi kol thaaypol padimisai emathu
thunnai enak kaaththavane
Verse 4kaarirul aganridavae - nalla
kathiroli thigazhnthidavae
paarithaip puratti urulach sey thaekana
paangu seeraakki vaiththaay
Verse 5inraith thinamithilum - thozhil
enthentha vakaikalilum
un thiru maraipadi ozhugida emakkarul
oontriye kaaththuk kolvaay
Download Song