Verse 1தோத்திரம் செய்வேனே இரட்சகனைத்
தோத்திரம் செய்வேனே
பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணை வைத்த
பார்த்திபனை யு+தக் கோத்திரனை என்றும்
Verse 2அன்னை மரி சுதனை புல் மீது
அமிழ்து கழுவதனை
முன்னனை மீதுற்ற சின்னக் குமாரனை
முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை
Verse 3செம்பொன்னுரவானை தேசிகர்கள்
தேடும் குருவானை
அம்பர மேவிய உம்பர் கணத்தோடு
அன்பு பெற நின்று பைம் பொன்மலர் தூவி
Verse 4கந்தை பொதிந்தவனை வானோர்களும்
வந்தடி பணிபவனை
மந்தையர்க்கானந்த மாட்சியளித்தோனை
வானபரன் என்னும் ஞான குணவானை
Verse 1thoththiram seyvaene ratchakanai
thoththiram seyvaene
paaththiramaakka immaathram karunai vaiththa
paarththibanai yu+thak koththiranai endrum
Verse 2annai mari sudhanai pul meedhu
amizhthu kazhuvadhanai
munnanai meedhutra sinnak kumaaranai
munnurai noorpadi innilath thutronai
Verse 3semponnuraavaanai thesikarkal
thaedum guruvaanai
ambara maeviya umbar kanaththodu
anbu pera nindru paim ponmalar thoovi
Verse 4kanthai pothinthavanai vaanolorkalum
vanthadi panibavanai
manthaiyarkkaanandha maatchiyaliththonai
vaanaparan ennum gnaana gunavaanai
Download Song