Thozhukirom Engal Pithave
Verse 1தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதினால் சரணம்! சரணம்!
Verse 2வெண்மையும் சிவப்புமானவர்
உண்மையே உருவாய்க் கொண்டவர்
என்னையே மீட்டுக் கொண்டவர்
அன்னையே இதோ சரணம்! சரணம்!
Verse 3தலை தங்க மயமானவர்
தலை மயிர் சுருள் சுருளானவர்
பதினாயிரம் பேரில் சிறந்தவர்
பதினாயிரமாம் சரணம்! சரணம்!
Verse 4கண்கள் புறாக் கண்கள் போல
கன்னங்கள் பாத்திகள் போல
சின்னங்களும் சிறந்ததாலே
எண்ணில்லாத சரணம்! சரணம்!
Verse 5கரங்கள் பொன் வளையங்கள் போல
நிறங்கள் தந்தத்தைப் போல
கால்களும் கல் தூண்கள் போல
காண்பதாலே சரணம்! சரணம்!
Verse 6சமஸ்த சபையின் சிரசே
நமஸ்காரம் எங்கள் அரசே
பிரதான எம் மூலைக்கல்லே
ஏராளமாம் சரணம்! சரணம்!
Verse 7அடியார்களின் அஸ்திபாரம்
அறிவுக்கெட்டாத விஸ்தாரம்
கூடி வந்த எம் அலங்காரம்
கோடா கோடியாம் சரணம்! சரணம
Verse 8பார்த்திபனே கன தோத்திரம்
கீர்த்தனம் மங்கள தோத்திரம்
வாழ்க வாழ்க வாழ்க என்றும்
அல்லேலூயா! ஆமென்! ஆமென்
Verse 1thozhugiroam engal pithaavae
pozhuthellaam aavi unmai yudanae
parisuththa alangaaraththudanae
tharisipathinaal saranam! saranam!
Verse 2venmaiyum sivappumaanavar
unmaiyae uruvaaik kondavar
ennaiyae meettuk kondavar
annaiyae itho saranam! saranam!
Verse 3thalai thanga mayamaanavar
thalai mayir surul surulaanavar
pathinaayiram paeril siranthavar
pathinaayiramaam saranam! saranam!
Verse 4kannkal puraak kannkal poala
kannangal paaththikal poala
sinnangalum siranthathaalae
ennillaatha saranam! saranam!
Verse 5karangal pon valaiyangal poala
nirangal thanthaththaip poala
kaalkalum kal thoonkal poala
kaanpathaalae saranam! saranam!
Verse 6samastha sabaiyin sirasae
namaskaaram engal arasae
prathaana em moolaikkallae
earaalamaam saranam! saranam!
Verse 7adiyaarkalin asthipaaram
arivukkettaatha visthaaram
koodi vantha em alangaaram
koadaa koadiyaam saranam! saranam!
Verse 8paarththipanae kana thoaththiram
keerththanam mangala thoaththiram
vaazhga vaazhga vaazhga endrum
allaelooyaa! aamen! aamen!
Download Song