Verse 1தூபம் போல் என் ஜெபங்கள்
ஏற்றுக் கொள்ளும் ஐயா
மாலைபலிபோல் என் கைகளை
உயர்த்தினேன் ஐயா
உம்மை நோக்கி கதறுகிறேன்
விரைவாய் உதவி செய்யும்
Verse 2என் குற்றங்கள் நீர் மனதில் கொண்டால்
நிலைதிற்க முடியாதையா
மன்னிப்புத் தருபவரே
உம்மைத்தான் தேடுகிறேன்
Verse 3விடியலுக்காய் காத்திருக்கும்
காவலனைப் பார்க்கிலும்
என் நெஞ்சம் ஆவலுடன்
உமக்காய் ஏங்குதையா
Verse 4என் வாய்க்கு காவல்வையும்
காத்துக் கொள்ளுமையா
தீயன எதையுமே - நான்
நாட விடாதேயும்
Verse 5என் கண்கள் உம்மைத்தானே
நோக்கி இருக்கின்றன
அடைக்கலம் புகந்தேன் - நான்
அழிய விடாதேயும்
Verse 6என் கண்ணீரை உம்தோற்பையிலே
சேர்த்து வைத்திருக்கிறீர்
அலைச்சல் அனைத்தையும்
அறிந்து இருக்கிறீர்
Verse 7இடர் (தடை)களெல்லாம் நீங்கும்வரை
புகலிடம் நீர்தானையா
எனக்காய் யாவையுமே
செய்து முடிப்பவரே
Verse 1thoobam pol en jebangal
etrukkollum ayyaa
maalaibalipol en kaigalai
uyarththineen ayyaa
ummai nokki katharugiren
viraivaai udhavi seiyyum
Verse 2en kutrangal neer manadhil kondal
nilaithirka mudiyadhaiyaa
mannipputh tharubavare
ummaiththaan thedugiren
Verse 3vidiyalukkaai kaaththirukkum
kaavalanai paarkkilum
en nenjam aavaludan
umakkaai yengudhaiyaa
Verse 4en vaaikku kaaval vaiyum
kaaththuk kollumaiyaa
theeyana edhaiyume - naan
naada vidaatheeyum
Verse 5en kangal ummaiththaane
nokki irukkinrana
adaikkalam pugundhen - naan
azhiya vidaatheeyum
Verse 6en kanneerai umthorppaiyile
serththu vaiththirukkeer
alaichchal anaiththaiyum
arinthu irukkeer
Verse 7idar (thadai)galellaam neengumvarai
pugalidam neerdhaanaiyaa
enakkaai yaavaiyume
seithu mudippavare
Download Song