Verse 1துக்கம் கொண்டாட வாருமே
பாரும்! நம் மீட்பர் மரித்தார்
திகில் கலக்கம் கொள்ளுவோம்
இயேசு சிலுவையில் மாண்டார்.
Verse 2போர் வீரர் யூதர் நிந்தித்தும்
மா பொறுமையாய்ச் சகித்தார்
நாமோ புலம்பி அழுவோம்;
இயேசு சிலுவையில் மாண்டார்.
Verse 3கை காலை ஆணி பீறிற்றே
தவனத்தால் நா வறண்டார்;
கண் ரத்தத்தாலே மங்கிற்றே;
இயேசு சிலுவையில் மாண்டார்.
Verse 4மும்மணி நேரம் மாந்தர்க்காய்
தம் மெளனத்தாலே கெஞ்சினார்;
நல் வாக்கியம் ஏழும் மொழிந்தே
இயேசு சிலுவையில் மாண்டார்.
Verse 5சிலுவையண்டை வந்துசேர்
நேசர் ஐங்காயம் நோக்கிப்பார்;
ஒப்பற்ற அன்பைச் சிந்தியேன்;
இயேசு சிலுவையில் மாண்டார்.
Verse 6உருகும் நெஞ்சும் கண்ணீரும்
உள்ளன்பும் தாரும் இயேசுவே;
மாந்தர்மீதன்பு கூர்ந்ததால்
நீர் சிலுவையில் மாண்டீரே!
Verse 1dhukkam kondada vaarumae
paarum! nam meetpar mariththaar
dhigil kalakkam kolluvoam
yesu siluvaiyil maandaar
Verse 2poar veerar yoodhar nindhiththum
maa porumaiyaai sagiththaar
naamo pulambi azhuvoam;
yesu siluvaiyil maandaar
Verse 3kai kaalai aani peerittrae
dhavanaththaal naa varandaar;
kann raththaththaalae mangittrae;
yesu siluvaiyil maandaar
Verse 4mummani naeram maantharkkaai
tham maunaththaalae kenjinaar;
nal vaakkiyam aezhum mozhindhae
yesu siluvaiyil maandaar
Verse 5siluvaiyandai vandhu saer
naesar aingaayam noakkippaar;
oppatra anbai sindhiyaen;
yesu siluvaiyil maandaar
Verse 6urugum nenjum kanneerum
ullanbum thaarum yesuvae;
maantharmeedhanbu koorndhadhaal
neer siluvaiyil maandeerae!
Download Song