Thukkam Thigil Irul Soola
Verse 1துக்கம் திகில் இருள் சூழ
மோட்ச யாத்திரை செய்கிறோம்
கீதம்பாடி முன்னே நோக்கி
மோட்ச பாதை செல்கிறோம்
Verse 2இருள் சூழ்ந்தும் பிரகாசிக்கும்
தீப ஸ்தம்ப ஜோதியும்
வீரமாக ஐக்கியமாக
முன்னே செல்வோம் ராவிலும்
Verse 3பக்தரோடு தங்கிச் செல்லும்
தெய்வமாம் ஒளி ஒன்றே
இருள் நீங்க அச்சம் நீங்கும்
பாதை முற்றும் பகலே
Verse 4எங்கள் ஜீவ நோக்கம் ஒன்றே
குன்றா விசுவாசமும்
எங்கள் ஊக்க வாஞ்சை ஒன்றே
ஒன்றே என் நம்பிக்கையும்
Verse 5மோட்சம் செல்லும் கோடிப்பேரும்
பாடும் பாட்டு ஒன்றேயாம்
ஆபத்து போராட்டம் தெய்வ
பாதை செல்வதும் ஒன்றாம்
Verse 6மோட்ச கரை சேர்ந்த பின்னும்
பூரிப்பானந்தம் ஒன்றே
ஒரே சர்வ வல்ல பிதா
அன்பால் அரசாள்வாரே
Verse 7முன்னே செல்வீர் தோழரே நீர்
சிலுவை உம் பலமாம்
நிந்தை தாங்கிப் போர்புரிவீர்
ஆயுள் காலம் எல்லாம்
Verse 8நியாயத் தீர்ப்பு மா தினத்தில்
கல்லறை விட்டெழுவோம்
துக்கம் திகில் யாவும் நீங்கும்
பாடும் ராவும் ஓய்ந்துபோம்
Verse 1dhukkam dhigil irul soozha
motcha yaaththirai seigirom
geetham paadi munne nokki
motcha paadhai selgirom
Verse 2irul soozhndhum pirakaasikkum
dheepa sthamba jothiyum
veeramaaga aikkiyamaaga
munne selvom raavilum
Verse 3baktharodu thanggichchellum
dheivamaam oli ondre
irul neenga achcham neengum
paadhai muttrum pagale
Verse 4engal jeeva nokkam ondre
kundraa visuvaasamum
engal ookka vaanjai ondre
ondre en nambikkaiyum
Verse 5motcham sellum kotipperum
paadum paattu ondreyaam
aabathu poraattam dheiva
paadhai selvadhum ondraam
Verse 6motcha karai serndha pinnum
poorippaanandham ondre
ore sarva valla pithaa
anbaal arasaalvaare
Verse 7munne selveer thozhare neer
siluvai um balamaam
nindhai thaanggip porpuriveer
aayul kaalam ellaam
Verse 8niyaaya theerppu maa dhinaththil
kallarai vitteluvom
dhukkam dhigil yaavum neengum
paadum raavum oindhupom
Download Song