Verse 1துள்ளுதையா உம் நாமம் சொல்ல சொல்ல
துதித்து துதித்து தினம் மகிழ்ந்து மகிழ்ந்து
மனம் துள்ளுதையா
Verse 2அன்பு பெருகுதையா - என்
அப்பாவின் நிழல்தனிலே
அபிஷேஷகம் வளருதையா
எபிநேசர் பார்வையிலே
Verse 3உள்ளங்கள் மகிழுதையா
உம்மோடு இருக்கையிலே
பள்ளங்கள் நிரம்புதையா
பாடி துதிக்கையிலே
Verse 4நம்பிக்கை வளருதையா
நாதா உம் பாதத்திலே
நன்மைகள் பெருகுதையா
நாள்தோறும் துதிக்கையிலே
Verse 5நோய்கள் நீங்குதையா - உம்மை
நோக்கிப் பார்க்கையிலே
பேய்கள் அலறுதையா
பெரியவர் நாமத்திலே
Verse 6கண்ணீர்கள் மறையுதையா
கர்த்தர் உம் சமூகத்திலே
காயங்கள் ஆறுதையா
கருத்தோடு துதிக்கையிலே
Verse 1thulluthaiyaa um naamam solla solla
thuthiththu thuthiththu thinam magizhndhu magizhndhu
manam thulluthaiyaa
Verse 2anbu peruguthaiyaa - en
appaavin nizhal thanile
abishaesham valaruthaiyaa
ebinaesar paarvaiyile
Verse 3ullangal magizhuthaiyaa
ummodu irukkaiyile
pallangal nirambuthaiyaa
paadi thuthikkaiyile
Verse 4nambikkai valaruthaiyaa
naathaa um paathathile
nanmaigal peruguthaiyaa
naal thorum thuthikkaiyile
Verse 5noygal neenguthaiyaa - ummai
nokki paarkkaiyile
paeygal alaruthaiyaa
periyavar naamathile
Verse 6kanneergal maraiyuthaiyaa
karththar um samugaththile
kaayangal aaruthaiyaa
karuththodu thuthikkaiyile
Download Song