Thuthi Sei Manamey Nitham
Verse 1துதிசெய் மனமே நிதம் துதிசெய்
துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை
இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே
Verse 2முன் கால மெல்லாம் உன்னைத் தம் கரமதில் ஏந்தி
வேண்டிய நன்மைகள் யாவும் உனக்களித்தாரே
Verse 3ஏங்கிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது
ஏகபரன் உன்காவலனாய் இருந்தாரே
Verse 4சோதனை பலவாய் மேகம்போல் உன்னை சூழ்ந்தாலும்
சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை
Verse 5தாய் தந்தை தானும் ஏகமாய் உனை மறந்தாலும்
தூயரின் கையில் உன் சாயல் உள்ளதை நினைத்தே
Verse 6சந்ததம் உன்னை நடத்திடும் சத்திய தேவன்
சொந்தம் பாராட்டி உன்னுடன் இருப்பதினாலே
Verse 1thuthisey maname nitham thuthisey
thuthisey immattum nadaththina un devanai
indrum endrum nandri miguntha manathode
Verse 2mun kaala mellaam unnaith tham karamathil yenthi
vaendiya nanmaigal yaavum unakkaliththaare
Verse 3aengidum vazhiyil paadugal pala naernthapothu
aegaparan unkaavalanai irunthaare
Verse 4sothanai palavaai maegampol unnai soozhnthaalum
sethamuraamal muttrilum kaakka vallorai
Verse 5thaai thanthai thaanum aekamaai unai maranthaalum
thooyarin kaiyil un saayal ullathai ninaiththae
Verse 6santhatham unnai nadaththidum saththiya devan
sontham paaraatti unnudan iruppathinaale
Download Song