துதிப்பதற்கு சோர்ந்து போகாதே - நீ
ஜெபிப்பதற்கு மறந்து விடாதே (2)
சமயம் வாய்த்தாலும் வாய்க்கா விட்டாலும்
தேவ செய்தியை சொல்லிடு
சமயம் வாய்த்தாலும் வாய்க்கா விட்டாலும்
தேவனுக்கு நன்றி சொல்லிடு
Verse 2
ஜெபிக்கின்ற மனிதன் தேவனிடம் இருந்து
நல்ல பதில் கொண்டு வருவான் (2)
ஜெபிப்பதினால் தேவனிடம் இருந்து
ஜெயத்தைக் கொண்டு வருவான் (2)
Verse 3
போதிக்கின்ற மனிதன் இயேசுவிடம் இருந்து
நல்ல செய்தி கொண்டு வருவான்
போதிப்பதினால் தன் தேவனுக்காய்
ஆத்துமா அறுவடை செய்வான
Verse 4
துதிக்கின்ற மனிதன் பரத்தில் இருந்து
தேவனையே கொண்டு வருவான்
துதிக்கும் போது உன் சிறையிருப்பை
தேவன் உடைத்தெறிவாh