Thuthiyey Thuthiyey Thuthiyey
Verse 1துதியே துதியே துதியே துதியே
துதியுமக்கே துதியே (2)
Verse 2தூத கணங்கள் தூயவர் உம்மை
பாத சேவைசெய்து பணிந்தும்மைத் துதிக்கும்
வேத முதல்வனும் நீர் - துதி
Verse 3அண்டசராசரம் அனைத்துமே ஒன்றாய்
விண்டலாதிபா வியந்தும்மைத் துதிக்கும்
பரிசுத்த தேவனும் நீர் - துதி
Verse 4பரிசுத்தர் யாவரும் பரமனே உம்மைத்
தரிசிக்க நாடி தாழ்ந்தும்மைத் துதிக்கும்
பரிசுத்த தேவனும் நீர் - துதி
Verse 5அந்தகாரத்தின் அடிமைகளுக்கு
சுந்தர ஒளியை சுடரிடச் செய்ய
வந்த குமாரனும் நீர் - துதி
Verse 6மீட்கப்பட்டவர்கள் ஆனந்தங் கொண்டு
பாட்டுகள் பாடி மகிழ்ந்தும்மைத் துதிக்கும்
ஆட் கொண்ட நாதனும் நீர் - துதி
Verse 7கர்த்தாதி கர்த்தனே இராஜாதி ராஜனே
நித்தியமான எம் தேவாதி தேவே
துத்தியம் செய்திடுவோம் - துதி
Verse 1thuthiye thuthiye thuthiye thuthiye
thuthiyumakke thuthiye (2)
Verse 2thutha ganangal thooyavar ummai
paatha sevai seithu paninthummaith thuthikkum
vetha muthalvanum neer - thuthi
Verse 3andasaraasaram anaiththume ondraai
vindalaathipaa viyanthummaith thuthikkum
parisuththa thevanum neer - thuthi
Verse 4parisuththar yaavarum paramane ummaith
tharisikka naadi thaazhnthummaith thuthikkum
parisuththa thevanum neer - thuthi
Verse 5anthakaaraththin adimaigalukku
sunthara oliyai sudaridach seyya
vantha kumaaranum neer - thuthi
Verse 6meetkappattavargal aananthang kondu
paattugal paadi magizhnthummaith thuthikkum
aat konda naathanum neer - thuthi
Verse 7karththaathi karththane iraajaathi raajane
niththiyamaana em thevaathi theve
thuththiyam seithiduvom - thuthi
Download Song