Verse 1உலகத்தைப் பலமுள்ள
கையால் ஆண்டு தினமே
என்னைக் காக்கும் உண்மையுள்ள
மா பெரிய கர்த்தரே
என்னைத் தெய்வ துதிக்கும்
இந்த நாள் எழுப்பிடும்.
Verse 2கர்த்தரின் திருநாளான
இந்த நாள் மா இன்பமே
இதில் ஓய்வும் உண்மையான
ஆறுதலும் ஈவீரே;
இதில் ஆவியானவர்
மோட்ச வழி காட்டுவர்.
Verse 3என் ரட்சிப்பை நடப்பிக்க
இந்த வேளை தக்கதே;
தெய்வ தயவைச் சிந்திக்க
என்னைத் தூண்டி ஏவுமே;
என் ஜெபம் புகழ்ச்சியும்
வானமட்டும் ஏறவும்.
Verse 4தேனைப்பார்க்கிலும் தித்திக்கும்
உம்முடைய வசனம்
ஆத்துமத்தைப் போஷிப்பிக்கும்
ருசியான அமிர்தம்;
ராப்பகலும் அதை நான்
சிந்தித்தால் மெய்ப் பாக்கியவான்.
Verse 5எங்கள் ஜெபத்துக்கன்பாக
நீரே ஆமேன் என்கவும்
மோட்சத்தில் உம்மை நேராக
நாங்கள் பார்க்குமட்டுக்கும்
ஏகமாய் வணங்குவோம்
உம்மைப் பாடிப் போற்றுவோம்.
Verse 1ulagaththai balamulla
kaiyaal aanndu thinamae
ennaik kaakkum unnmaiyulla
maa periya karththarae
ennaith dheiva thuthikkum
indha naal ezhuppidum.
Verse 2karththarin thirunaalaana
indha naal maa inbamae
idhil oyvum unnmaiyaana
aaruthalum eevirae;
idhil aaviyaanavara
motcha vazhi kaattuvar.
Verse 3en ratchippai nadaththikka
indha vaelai thakkathae;
dheiva thayavaich sindhikka
ennaith thoonddi aevumae;
en jebam pugazhchchiyum
vaanamattum aeravum.
Verse 4thaenaippaarkkilum thiththikkum
ummudaiya vasanam
aaththumaththaip poshippikkum
rusiyaana amirtham;
raappagalum athai naan
sindhiththaal meyp paakkiyavaan.
Verse 5engal jebaththukkanbaaga
neerae aamaen enkavum
motchaththil ummai naeraaga
naangal paarkkumattukkum
aekamaai vananguvom
ummaip paadip pottruvom.
Download Song