Verse 1உலகோர் உன்னைப் பகைத்தாலும்
உண்மையாய் அன்பு கூறுவாயா? (2)
உற்றார் உன்னை வெறுத்தாலும்
உந்தன் சிலுவை சுமப்பாயா? (2)
Verse 2உனக்காக நான் மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் (2)
Verse 3உலக மேன்மை அற்பம் என்றும்
உலக ஆஸ்தி குப்பை என்றும்
உள்ளத்தினின்று கூறுவாயா?
ஊழியம் செய்ய வருவாயா? (2) – உனக்காக
Verse 4மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல்
மேய்கிறார் பாவப்புல் வெளியில் (2)
மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும்
மேன்மையை நாடி ஓடுகின்றாயோ? (2) – உனக்காக
Verse 5இயேசு என்றால் என்ன விலை
என்றே கேட்டிடும் எத்தனை பேர் (2)
பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர்
ஜீவ அப்பம் கொடுப்பாயோ? (2) – உனக்காக
Verse 6ஐந்து சகோதரர் அழிகின்றாரே
யாரையாவது அனுப்பிடுமே (2)
யாரை நான் அனுப்பிடுவேன்
யார் தான் போவார் எனக்காக (2) – உனக்காக
Verse 1ulagOr unnai pagaiththaalum
unmaiyaai anbu kooruvaayaa? (2)
utraar unnai veruththaalum
unthan siluvai sumappaayaa? (2)
Verse 2unakkaaga naan mariththaenae
enakkaaga nee enna seidhaai (2)
Verse 3ulaga maenmai arpam endrum
ulaga aasththi kuppai endrum
ullaththinindru kooruvaayaa?
oozhiyam seiyya varuvaayaa? (2) – unakkaaga
Verse 4meyppan illaatha aadugal pOl
meygiraar paavappul veliyil (2)
meyppan yesuvai arintha neeyum
maenmaiyai naadi OduginraayO? (2) – unakkaaga
Verse 5yesu endraal enna vilai
endrae kaettidum eththanai paer (2)
pillaigal appam kaetkinranar
jeeva appam koduppaayO? (2) – unakkaaga
Verse 6ainthu sagOdharar azhigindraarae
yaaraiyaavadhu anuppidumae (2)
yaarai naan anuppiduvaen
yaar thaan pOvaar enakkaaga (2) – unakkaaga
Download Song