உள்ளமெல்லாம் உருகுதய்யா உத்தமனை நினைக்கையிலே
உம்மையல்லால் வேறே தெய்வம் உண்மையாக இங்கில்லையே
கள்ளன் என்று தள்ளிடாமல் அள்ளி என்னை அணைத்தவா
சொல்லடங்கா நேசத்தாலே உன் சொந்தமாக்கிக் கொண்டீரே
Verse 2
எத்தன் என்னை உத்தமனாக்க சித்தம் கொண்டீர் என் இயேசய்யா
எத்தனையோ துரோகம் நான் செய்தேன் அத்தனையும் நீர் மன்னீத்தீர்
இரத்தம் சிந்த வைத்தேனே நான் அத்தனையும் என் பாவமல்லோ
கத்தனே உம் அன்புக்கீடாய் நித்தம் செய்வேன் உம் சேவையே
Verse 3
மேகமீதில் இயேசு ராஜன்
வேகம் தோன்றும் நாளன்றோ
லோகமீதில் காத்திருப்போர்
ஏக்கமெல்லாம் தீர்ந்திட தியாக ராஜன்
இயேசுவை நான் முகமுகமாய் தரிசிக்க
ஆவலோடு ஏங்கும் தாசன்
சோகம் நீங்கும் நாள் என்றோ