Verse 1உம் அருள் பெற இயேசுவே
நான் பாத்திரன் அல்லேன்;
என்றாலும் தாசன் பேரிலே
கடாக்ஷம் வையுமேன்.
Verse 2நீர் எனக்குள் பிரவேசிக்க
நான் தக்கோன் அல்லவே
நீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க
நிமித்தம் இல்லையே.
Verse 3ஆனாலும் வாரும் தயவாய்
மா நேச ரக்ஷகா;
என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய்
என் பாவ நாசகா.
Verse 4நற்கருணையாம் பந்திக்கும்
அபாத்திரன் ஆயினேன்
நற் சீரைத் தந்து என்னையும்
கண்ணோக்கிப் பாருமேன்.
Verse 5தெய்வீக பான போஜனம்
அன்பாக ஈகிறீர்;
மெய்யான திவ்விய அமிர்தம்
உட்கொள்ளச் செய்கிறீர்.
Verse 6என் பக்தி ஜீவன் இதினால்
நீர் விர்த்தியாக்குமேன்;
உந்தன் சரீரம் இரத்தத்தால்
சுத்தாங்கம் பண்ணுமேன்.
Verse 7என் ஆவி தேகம் செல்வமும்
நான் தத்தம் செய்கிறேன்;
ஆ இயேசுவே சமஸ்தமும்
பிரதிஷ்டை செய்கிறேன்.
Verse 1Um arul pera yesuve
Naan paaththiran alleen;
Endraalum thaasan perile
Kadaatcham vaiyumeen.
Verse 2Neer enakkul piravesikka
Naan thakkon allave
Neer en paazh nenjai aasikka
Nimiththam illaiye.
Verse 3Aanaalum vaarum thayavaai
Maa nesa rakshakaa;
Endraikkum thangum aikkiyamaai
En paava naasakaa.
Verse 4Narkurunaiyaam panthikkum
Apaaththiran aayineen
Nar seeraith thanthu ennaiyum
Kannnokkip paarumeen.
Verse 5Theiveega paana bojanam
Anbaaga eekireer;
Meiyaana thivviya amirtham
Utkolla seikireer.
Verse 6En bakthi jeevan ithinaal
Neer virththiyaakkumeen;
Unthan sareeram iraththaththaal
Suththaangam pannumeen.
Verse 7En aavi thegam selvamum
Naan thaththam seikireen;
Aa yesuve samasthaththum
Prathishtai seikireen.
Download Song