Verse 1உம் பீடத்தை சுற்றி சுற்றி
நான் வருகிறேன் தெய்வமே
கறைகளெல்லாம் நீங்கிட
என் கைகளைக் கழுவுகிறேன்
என் தெய்வமே இயேசுநாதா
இதயமெல்லாம் மகிழுதையா...
Verse 2உரத்த குரலில் நன்றிப் பாடல்
பாடி மகிழ்கிறேன்
வியத்தகு உம் செயல்களெல்லாம்
எடுத்து உரைக்கிறேன்
Verse 3உந்தன் மாறாத பேரன்பு
என் கண்முன் இருக்கிறது
உம் திருமுன்னே உண்மையாக
வாழ்ந்து வருகிறேன்
Verse 4கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன்
தடுமாற்றம் எனக்கில்லை
உந்தன் சமூகம் உந்தன் மகிமை
உண்மையாய் ஏங்குகிறேன்
Verse 1Um peedaththai sutri sutri
Naan varugiren deivamae
Karaigalellaam neengida
En kaigalaik kazhuvugiren
En deivamae yesunaathaa
Idhaiyamellaam magizhuthaiyaa...
Verse 2Uraththa kuralil nandri paadal
Paadi magizhgiren
Viyaththagu um seyalgalellaam
Eduththu uraikkiren
Verse 3Unthan maaraatha paeranbu
En kanmun irukkirathu
Um thirumunnae unmaiyaaga
Vaazhnthu varugiren
Verse 4Karththaavae ummaiyae nambiyullaen
Thadumaatram enakkillai
Unthan samookam unthan magimai
Unmaiyaai aengugiren
Download Song