Verse 1உம் சார்பினில் நடத்தும் தந்தையே;
உம் துணையின்றி தவறுவோமே
சந்தேகம் சூழும் துக்கம் மிஞ்சிடும்;
மெய் வழி கிறிஸ்துமூலம் நடத்தும்.
Verse 2சத்தியத்தில் நடத்தும் தந்தையே;
உம் துணையின்றி கேடு சூழுமே;
வாணாள் சிற்றின்ப மாய்கையால் கெடும்
சற்றும் நம்பிக்கையற்றே வாடிடும்.
Verse 3சன்மார்க்கத்தில் நடத்தும் தந்தையே;
உம் துணையின்றி வழி காணோமே;
கார்மேகம் மூடி இருள் சூழுவோம்
உம்மாலே சேதமின்றிச் செல்லுவோம்.
Verse 4விண் ஓய்வுக்கு நடத்தும் தந்தையே;
காடு மேடான பாதை என்றுமே
உம் சித்தம்போலே துன்பம் இன்பமும்
தந்தடியாரை வானோர் ஆக்கிடும்.
Verse 1Um saarbinil nadaththum thanthaiyae;
Um thunnaiyindri thavaruvomae
Sandhaegam soozhum thukkam minjidum;
Mei vazhi kristhumoolam nadaththum.
Verse 2Saththiyaththil nadaththum thanthaiyae;
Um thunnaiyindri kaedu soozhumae;
Vaannaal sitrinba maaykaiyaal kedum
Satrum nambikkaiyattrae vaadidum.
Verse 3Sanmaarkkaththil nadaththum thanthaiyae;
Um thunnaiyindri vazhi kaanoamae;
Kaarmaegam moodi irul soozhuvom
Ummaalae saedhamindrich chelluvom.
Verse 4Vin oyvukku nadaththum thanthaiyae;
Kaadu maedaana paathai endrumae
Um siththampolae thunbam inbamum
Thanthadiyaarai vaanoar aakkidum.
Download Song