உன் நெஞ்சிலே
உண்டான விசாரங்களை நீ
கர்த்தாவின் உண்மையான
கரத்துக்கொப்புவி ;
விண்மனை ஆண்டிருக்கும்
மகா தயாபரர்
உன் காரியங்களுக்கும்
வழியுண்டாக்குவார்.
Verse 2
ஜெயமடைந்து வாழ
கர்த்தாவைப் பிள்ளை போல்
நீ நம்பி மனதார
பணிந்து பற்றிக்கொள்.
உன் கவலைகளாலே
பயம் ரட்டிக்குது;
வேண்டாம் ஜெபத்தினாலே
நீ வேண்டிக்கொண்டிரு .
Verse 3
ஏழை அடியாருக்கு
பிதாவாம் தேவரீர்
இன்னின தெங்களுக்கு
வேண்டும் என்றறிவீர் ;
நீர் எதை நல்லதாக
கண்டீரோ அதை நீர்
உம் வேளை பலமாக
வர விடுகிறீர் .
Verse 4
பல வழிவகையும்
உம்மாலே ஏற்படும் ;
நீர் செய்வது இசையும்
நீர் சொன்னது வரும்;
நீர் வாக்குத்தத்தமாக
பொழிந்தவை எல்லாம்
உம்மாலே திட்டமாக
நற்காலத்தில் உண்டாம்.
Verse 5
இக்கட்டுகளினாலே
கலங்கினோனே நீ
திடன் கொள் கர்த்தராலே
இக்கட்டான ராத்திரி
சந்தோஷமாக மாறும்
சற்றே பொறுத்திரு ;
நீ பூரிப்பாய் கொண்டாடும்
நாள் வரப்போகுது .
Verse 6
உன் கவலைகளுக்கு
இன்றே விடை கொடு;
இனிவிசாரத்துக்கு
இடங்கொடாதிரு ;
நீ ஆளும் தெய்வமல்ல
நீ பூச்சி யென்றறி;
சருவத்திற்கும் வல்ல
கர்த்தர் அதிபதி .
Verse 7
நீ பக்தியை விடாமல்
பொறுத்திருக்கையில்
கர்த்தர் நீ நினையாமல்
இருக்கும் நேரத்தில்
உன் துக்கத்தை அகற்ற
வெளிச்சம் காண்பிப்பார் ;
நீ நன்மைக்காகப் பட்ட
சலிப்பை நீக்குவார் .
Verse 8
அட்சணமே பலத்த
ஜெயமும் பூரிப்பும்
ஆசிர்வதிக்கப்பட்ட
தெய்வீகத் தேற்றலும்
அடைந்து இன்பமான
மன மகிழ்ச்சியாய்
அன்புள்ள மீட்பரான
கர்த்தாவைப் பாடுவாய் .
Verse 9
கர்த்தாவே எங்களுக்கு
எல்லா இக்கட்டிலும்
ரட்சிப்பளிப்பதற்கு
நேரிட்டுக்கொண்டிரும் ;
ஆ எங்களைத் தேற்றிடும்;
பரகதிக்குப் போம்
வழியிலும் நடத்தும்
அப்போ பிழைக்கிறோம்
Verse 1
Un nenjile
Undana visaarangalai nee
Karthavin unmaiyaana
Karaththukkoppuvi;
Vinmanai aandirukkum
Mahaa dhayaaparar
Un kaariyangalukkum
Vazhiyundaakkuvaar.
Verse 2
Jeyamadaindhu vaazha
Karththaavaip pillai pol
Nee nambi manadhaar
Panindhu pattrikkol.
Un kavalaihalale
Bayam rattikkudhu;
Vendaam jebaththinaale
Nee vendikkondiru.
Verse 3
Ezhai adiyaarukku
Pidhaavaam dhevareer
Innina thengalukku
Vendum endrariveer;
Neer edhai nallaadhaaga
Kandeero adhai neer
Um velai balamaaga
Vara vidugireer.