Verse 1உன்னதமான ஸ்தலத்தில்
மா ஆழமுள்ள இடத்தில்
கர்த்தாவே நீர் இருக்கிறீர்
எல்லாவற்றையும் பார்க்கிறீர்.
Verse 2என் அந்தரங்க எண்ணமும்
உமக்கு நன்றாய்த் தெரியும்;
என் சுகதுக்கம் முன்னமே
நீர் அறிவீர் என் கர்த்தரே.
Verse 3வானத்துக்கேறிப் போயினும்
பாதாளத்தில் இறங்கினும்
அங்கெல்லாம் நீர் இருக்கிறீர்
தப்பாமல் கண்டுபிடிப்பீர்.
Verse 4காரிருளில் ஒளிக்கினும்
கடலைத் தாண்டிப் போயினும்
எங்கே போனாலும் தேவரீர்
அங்கென்னைச் சூழ்ந்திருக்கிறீர்.
Verse 5ஆராய்ந்து என்னைச் சோதியும்
சீர்கேட்டை நீக்கி ரட்சியும்
நல்வழி தவறாமலே
நடத்தும் எந்தன் கர்த்தரே.
Verse 1unnathamaana sthalaththil
maa aazhamulla idaththil
karththaavae neer irukkireer
ellaavatraiyum paarkkireer.
Verse 2en antharanga ennamum
umakku nantraayth theriyum;
en sukathukkam munnamae
neer ariveer en karththarae.
Verse 3vaanaththukkaerip poayinum
paathaalaththil iranginum
angellaam neer irukkireer
thappaamal kandupidippeer.
Verse 4kaarirulil olikkinum
kadalaith thaantip poayinum
engae poanaalum thaevareer
angennaich soozhnthirukkireer.
Verse 5aaraaynthu ennaich sothiyum
seerkettai neekki ratchiyum
nalvazhi thavaraamalae
nadaththum enthan karththarae.
Download Song