Verse 1வாழ்க சிலுவையே; வாழ்க!
பாரமற்ற பாரமே
உன்னை முழுமனதார
தோள் மேல் ஏற்றிக் கொள்வேனே.
Verse 2இந்த நிந்தை லச்சை அல்ல
இது வெட்கம் அல்லவே;
ஏனெனில் பொல்லாப்புக்கல்ல
நன்மைக்காக வருதே.
Verse 3உலகத்தின் ஜோதியான
இயேசு தாமும் நிந்தைக்கே
ஏதுவாகி ஈனமான
சிலுவையில் மாண்டாரே.
Verse 4சிலுவை சுமந்தோராக
அவரைப் பின்பற்றுவோம்;
தீரங்கொண்டு வீரராக
துன்பம் நிந்தை சகிப்போம்.
Verse 5நேசர் தயவாய் நம்மோடு
சொல்லும் ஒரு வார்த்தையே
துக்கத்தை எல்லாம் கட்டோடு
நீங்கிப் போகச் செய்யுமே.
Verse 6சாகும்போது திறவுண்ட
வானத்தையும் அதிலே
மகிமையினால் சூழுண்ட
இயேசுவையும் காண்போமே.
Verse 7வாழ்க சிலுவையே! வாழ்க;
மோட்சத்தின் முன் தூதனே;
நீதிமான்கள் இளைப்பாற
நேர் வழியாம் வாசலே!
Verse 1vaazhga siluvaiyae; vaazhga!
paaramatra baaramae
unnai muzhumanadaara
thol mel etri kolvaenae.
Verse 2indha nindhai lachchai alla
idhu vetkam allavae;
yenenil pollaapukkalla
nanmaikkaaga varudhae.
Verse 3ulagathin jothiyaana
yesu thaamum nindhaikkae
aethuvaagi eenamaana
siluvaiyil maandaarae.
Verse 4siluvai sumandhoraaga
avaraip pinbattruvom;
theerangondu veeraraga
thunbam nindhai saghippom.
Verse 5naesar thayavaai nammodu
sollum oru vaarthaiyae
thukkaththai ellaam kattodu
neengi pogach seiyyumae.
Verse 6saagumboadhu thiravunda
vaanaththaiyum adhilae
magimaiyinaal soozhunda
yesuvaiyum kaanboamae.
Verse 7vaazhga siluvaiyae! vaazhga;
motchathin mun thoodhanae;
needhimaangal ilaippaara
ner vazhiyaam vaasalae!
Download Song