Vaalnalil Yaathu Nerittum
Verse 1வாழ்நாளில் யாது நேரிட்டும்
எவ்வின்ப துன்பத்தில்
நான் போற்றுவேன் என் ஸ்வாமியை
சிந்தித்து ஆன்மாவில்.
Verse 2சேர்ந்தே ஒன்றாய் நாம் போற்றுவோம்
அவர் மா நாமமே
என் தீங்கில் கேட்டார் வேண்டலே
தந்தார் சகாயமே.
Verse 3சன்மார்க்கர் ஸ்தலம் சூந்துமே
விண் சேனை காத்திடும்
கர்த்தாவைச் சாரும் யாவர்க்கும்
சகாயம் கிட்டிடும்.
Verse 4அவர் மா அன்பை ருசிப்பின்
பக்தர் நீர் காண்பீராம்
பக்தரே பக்தர் மட்டுமே
மெய்ப் பேறு பெற்றோராம்.
Verse 5கர்த்தாவுக்கஞ்சும் பக்தர்காள்
அச்சம் வேறில்லையே
களித்தவரைச் சேவிப்பின்
ஈவார் உம் தேவையே.
Verse 6நாம் போற்றும் ஸ்வாமியாம் பிதா
குமாரன் ஆவிக்கே
ஆதியில் போலும் எப்போதும்
மகிமை யாவுமே.
Verse 1vaalnaalil yaadhu nerittum
evvinba thunbaththil
naan pottruven en swaamiyai
sinthiththu aanmaavil
Verse 2serndhe ondraai naam pottruvom
avar maa naamame
en theengil kettaar vendale
thanthaar sagaayame
Verse 3sanmaarkkar sthalam soozhnthume
vin senai kaaththidum
karththaavaich chaarum yaavarkkum
sagaayam kittidum
Verse 4avar maa anbai rusippin
bhakthar neer kaanbeeraam
bhakthare bhakthar mattume
meyp peru petroraam
Verse 5karththaavukk anjum bhakthargaal
achcham verillaiye
kaliththavaraich sevippin
eevaar um thevaiye
Verse 6naam pottrum swaamiyaam pithaa
kumaaran aavikke
aadhiyil polum eppothum
magimai yaavume
Download Song