Verse 1வான ஜோதியாய் இலங்கி
மாண்பாய்ப் பொன்முடி தாங்கி
தெய்வ ஆசனமுன் நிற்பார்
மாட்சியாம் இவ்வானோர் யார்?
அல்லேலூயா! முழங்கும்
விண்ணின் வேந்தர் துதியும்.
Verse 2பகலோனின் ஜோதியோடு
தெய்வ நீதி அணிந்து
தூய வெண்மையான அங்கி
என்றும் தூய்மை விளங்கி
தூயோராய்த் தரித்தனர்
எங்கிருந்து வந்தனர்?
Verse 3ஜீவ காலம் முற்றும் மீட்பர்
மேன்மைக்காய்ப் போராடினர்
லோகத்தாரின் சேர்க்கை நீக்கி
சாவு மட்டும் போராடி
போரில் முற்றும் நின்றனர்
மீட்பராலே வென்றனர்.
Verse 4வேதனை தம் நெஞ்சைப் பீற
ஓங்கு துன்பம் சூழ்ந்திட
பணிந்து தம் தெய்வம் நோக்கி
வேண்டலோடு போராடி
இப்போ போர் முடித்திட்டார்
ஸ்வாமி கண்ணீர் நீக்கினார்.
Verse 5சர்வ வல்லோர் சந்நிதியில்
திவ்விய ஊழியத்தினில்
நின்று தேகம் ஆவியோடு
கட்டளை கீழ்ப்படிந்து
உன்னதத்தில் சேர்ந்திட்டார்
என்றும் தெய்வம் நோக்குவார்.
Verse 1vaana jothiyaai ilangki
maanbaai ponmudi thaangi
deiva aasanamun nirpaar
maatchiyaam ivvaanor yaar?
alleluuyaa! muzhangum
vinnin venthar thuthiyum.
Verse 2pagalonin jothiyodu
deiva neethi aninthu
thooya vennmaiyaana angi
endrum thooimai vilangi
thooyoraai thariththanar
enggirunthu vanthanar?
Verse 3jeeva kaalam muttrum meetpar
menmaikkaaip poraadinar
logaththaarin serkkai neekki
saavu mattum poraadi
poril muttrum nindranar
meetparaale vendranar.
Verse 4vedhanai tham nenjaip peera
ongku thunbam soozhnthida
panninthu tham deivam nokki
vendalodu poraadi
ippo por mudiththittaar
swami kanneer neekkinaar.
Verse 5sarva vallor sannithiyil
thivviya oozhiyaththinil
nindru thegam aaviyodu
kattalai keezhppadinthu
unnathaththil sernthittaar
endrum deivam nokkuvaar.
Download Song