Verse 1வாரும் பெத்லெகேம் வாரும் – வாரும்
வரிசையுடனே வாரும்
வாரும் எல்லோரும் போய் வாழ்த்துவோம் யேசுவை
வாரும் விரைந்து வாரும்
Verse 2எட்டி நடந்து வாரும் – அதோ
ஏறிட்டு நீர் பாரும்
பட்டணம்போல் சிறு பெத்லெகேம் தெரியுது
பாரும் மகிழ்ந்து பாரும்
Verse 3ஆதியிலத மேவை – அந்நாள்
அருந்திய பாவவினை
ஆ திரிதத்துவ தேவன் மனிதத்துவ
மாயினர் இது புதுமை
Verse 4விண்ணுலகாதிபதி – தீர்க்கார்
விளம்பின சொற்படிக்கு
மண்ணுலகில் மரிகன்னி வயிற்றினில்
மானிடனா யுதித்தார்
Verse 5சொல்லுதற் கரிதாமே – ஜோதி
சுந்தர சோபனமே
புல்லணையிற் பசுமுன்னணையிற்பதி
பூபதிதான் பிறந்தார்
Verse 6மந்தை மாடடையில் – மாது
மரியவள் மடியதனில்
கந்தைத் துணியதை விந்தைத் திருமகன்
காரணமாய் அணிந்தார்
Verse 7தூதர் பறந்துவந்து – தேவ
துந்துமி மகிழ்பாட
மாதவ ஞானிகள் ஆயர்கள் பணிந்து
மங்களமொடு நாட
Verse 1vaarum bethlehem vaarum – vaarum
varisaiyudane vaarum
vaarum ellorum poi vaazhththuvom yesuvai
vaarum viraindhu vaarum
Verse 2etti nadandhu vaarum – adho
aerittu neer paarum
pattanampol siru bethlehem theriyudhu
paarum magizhnthu paarum
Verse 3aadhiyiladha mevai – annaal
arundhiya paavavinai
aa thiriththuva devan manidhaththuva
maayinar idhu pudhumai
Verse 4vinnulagaadhipathi – theerkkaar
vilambina sorpadikku
mannulagil marikanni vayitrinil
maanidanaa yudhiththaar
Verse 5solludhar karidhaame – jothi
sundhara sobhaname
pullannaiyir pasumunnannaiyirpati
boobadhithaan pirandhaar
Verse 6mandhai maadadaiyil – maadhu
mariyaval madiyadhanil
kandhaith thuniyadhai vindhaith thirumagan
kaaranamai annindhaar
Verse 7thoodhar parandhuvandhu – deva
thundhumi magizhpaada
maadhava gnaanigal aayargal pannindhu
mangalamodu naada
Download Song