Use this song in StageFlo
Looking through lyrics right now? Open StageFlo to search and present LyricFront songs during your live set.
Verse 1 வாசல்களை உயர்த்துங்கள்
மகா கர்த்தாவை வாழ்த்துங்கள்
ராஜாதி ராஜா வருவார்
பெரிய தெய்வ மைந்தனார்.
உலகத்தைச் சிருஷ்டித்து
ரட்சித்த தேவரீருக்கு
துதி தயாபரா
ஆலோசனைக் கர்த்தா.
Verse 2 அவர் மா சாந்தமானவர்
சகாயர் நீதியுற்றவர்
ராஜாவின் முடி சுத்தமே
அவர் செங்கோல் இரக்கமே;
இக்கட்டை நீக்கினார் அன்பாய்
புகழ்ந்து பாடுங்கள் ஒன்றாய்
துதி மா கர்த்தரே
பலத்த மீட்பரே.
Verse 3 இக்கர்த்தர் உட்பிரவேசிக்கும்
போதெந்த ஊரும் தேசமும்
களிக்கும் எங்கள் இதயம்
அடைவதும் மெய்ப் பாக்கியம்
அவர் சந்தோஷப் பொழுதே.
மகிழ்ச்சியை அளிப்பாரே;
ஆ தேற்றும் உமக்கே
புகழ்ச்சி கர்த்தரே.
Verse 4 வாசல்களை உயர்த்துங்கள்
நெஞ்சை அலங்கரியுங்கள்
பக்தியின் குருத்தோலையும்
மகிழ்ச்சியின் கிளைகளும்
தெளியுங்கள் ராஜா வாறார்
உங்களையும் இரட்சிப்பார்
கர்த்தாவுக் கென்றைக்கும்
புகழ்ச்சி துதியும்.
Verse 5 என்னண்டை இயேசு வாருமேன்
என் வாசலைத் திறக்கிறேன்
அருள் புரியும் தேவரீர்
என் நெஞ்சில் தங்கக்கடவீர்
மோட்ச வழியைக் காண்பிக்கும்
நல் ஆவியைத் தந்தருளும்
என்றைக்கும் உமக்கே
புகழ்ச்சி கர்த்தரே.
Verse 1 vaasalkalai uyarththungal
mahaa karththaavai vaazhththungal
raajaathi raajaa varuvaar
periya dheiva maindhanaar.
ulagaththaich sirushtiththu
ratchiththa dhevareerukku
thuthi dhayaaparaa
aalosanaik karththaa.
Verse 2 avar maa saanthamaanavar
sagaayar needhiyutravar
raajaavin mudi suththamae
avar sengol irakkamae;
ikkattai neekkinaar anbaai
pugazhndhu paadungal ondraai
thuthi maa karththarae
balaththa meetparae.
Verse 3 ikkarththar utpiravaesikkum
podhendha oorum dhaesamum
kalikkum engal idhayam
adaivadhum meip paakkiyam
avar santhoshap pozhudhae.
magizhchchiyai alippaarae;
aa thaetrum umakkae
pugazhchchi karththarae.
Verse 4 vaasalkalai uyarththungal
nenjai alangkariyungal
bakthiyin kuruththoolaiyum
magizhchchiyin kilaikalum
theliyunngal raajaa vaaraar
ungalaiyum ratchippaar
karththaavuk kendraikkum
pugazhchchi thuthiyum.
Verse 5 ennandai yesu vaarumaen
en vaasalaith thirakkiraen
arul puriyum dhevareer
en nenjil thanggakkadaveer
motcha vazhiyaik kaanbikkum
nal aaviyai thandharulum
endraikkum umakkae
pugazhchchi karththarae.
Share
Download Song
Cancel
Download