Valla Yesu Kristhu Naatha
Verse 1வல்ல இயேசு கிறிஸ்து நாதா
நல்ல நேசமீட்பர் நீர்;
பற்று பாசம் கட்டு முற்றும்
அற்றுப்போகப்பண்ணுவீர்.
Verse 2அருள் ஜோதி தோன்றிடாமல்
இருள் மூடிக் கிடந்தோம்;
திக்கில்லாமல் பாவப் பற்றில்
சிக்கிக்கொண்டே இருந்தோம்.
Verse 3பக்தி ஒன்றுமில்லை பாரும்
சக்தியற்றுப் போயினோம்;
ஜீவ பாதை சென்றிடாமல்
பாவ பாதை நடந்தோம்.
Verse 4இயேசு நாதரே இப்போது
நேசமாக நிற்கிறீர்;
என்னை நம்பு பாவம் நீக்கி
உன்னைக் காப்பேன் என்கிறீர்.
Verse 5நம்பி வந்து பாவ நாசா
உந்தன் பாதம் அண்டினோம்;
தூய ரத்தம் பாயக் கண்டு
தீய செய்கை வெறுத்தோம்.
Verse 6பாவச் சேற்றிலே விழாமல்
தேவரீரே காத்திடும்;
வல்ல ஆவியாலே என்றும்
வெல்லச்செய்து ரட்சியும்.
Verse 1valla yesu kristhu naathaa
nalla nesameetpar neer;
patru paasam kattu mutrum
attruppogappannuveer.
Verse 2arul jothi thondridaamal
irul moodik kidanthom;
thikkillaamal paavap patril
sikkikkondae irunthom.
Verse 3bakthi ontrumillai paarum
sakthiyattrup poayinom;
jeeva paathai sendridaamal
paava paathai nadanthom.
Verse 4yesu naatharae ippothu
nesamaaga nirkireer;
ennai nambu paavam neekki
unnaik kaappen enkireer.
Verse 5nambi vanthu paava naasaa
unthan paatham andinom;
thooya ratham paayak kandu
theeya seygai veruththom.
Verse 6paavach chetrilae vizhaamal
thevareerae kaaththidum;
valla aaviyaalae endrum
vellachcheythu ratchiyum.
Download Song