Verse 1வாரும் நாம் எல்லோரும் கூடி,
மகிழ் கொண்டாடுவோம்; - சற்றும்
மாசிலா நம் யேசு நாதரை
வாழ்த்திப் பாடுவோம். ஆ!
Verse 2தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் - இந்தத்
தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் --- வாரும்
Verse 3மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் - அங்கே
மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் --- வாரும்
Verse 4ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் - பாரும்
நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார் --- வாரும்
Verse 5மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே - இந்த
மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார் --- வாரும்
Verse 6பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே - அவர்
பட்சம் வைத் துறும் தொழும்பரை ரட்சை செய்கிறார் --- வாரும்
Verse 1vaarum naam ellorum koodi,
magizh kondaaduvom; - satrum
maasilaa nam yesu naadharai
vaazhththi paaduvom. aa!
Verse 2thaarakam atra ezhaihal thazhaikka naayanaar - indhath
thaarani yile manudava thaaram aayinaar --- vaarum
Verse 3maa padhaviyai izhandhu variyar aana naam - ange
maatchi ura vendiye avar thaazhchi aayinaar --- vaarum
Verse 4njaalamadhil avarkkinai nanbar yaarular - paarum
nam uyirai meetkave avar tham uyir vittaar --- vaarum
Verse 5maa kodiya saavadhin valimai neekkiye - indha
mandalaththi ninruyirth thavar vindalanj sendraar --- vaarum
Verse 6paavigat kaaip paranidam parindhu vendiye - avar
patcham vaith thurum thozhumbarai ratchai seigiraar --- vaarum
Download Song