Vazhi nadathum valla devan
Verse 1வழி நடத்தும் வல்ல தேவன்
வாழ்வில் நாயகனே வாழ்வில் நாயகனே
நம் தாழ்வில் நாயகனே
Verse 2பரதேசப் பிரயாணிகளே நாம்
வாழும் பாரினிலே – பரமானந்தத்தோடே
செல்வோம் – பரமன் நாட்டிற்கே
இயேசு பரன் தம் வீட்டினிற்கே
Verse 3போகும் வழியைக் காட்டி நல்ல
போதனை செய்வார் – ஏகும் சுத்தர்
மீது கண்கள் இருத்தி நடத்துவார்
இயேசு திருத்தி நடத்துவார்
Verse 4அந்தகார சக்திகள் எம்மை
அணுகிடாமலே – சொந்தமான
தம் ஜனத்தை சூழ்ந்து காப்பாரே
இயேசு துணையாய் நிற்பாரே
Verse 5வாதை நோய்கள் வன்துன்பங்கள்
வருத்திய போதும் – பாதையில்
நாம் சோர்ந்திடாமல் பலப்படுத்திடுவார்
இயேசு திடப்படுத்திடுவார்
Verse 6காடானாலும் மேடானாலும் கடந்து
சென்றிடுவோம் – பாடானாலும்
பாடிச் செல்வோம் பரவசமுடனே
இயேசு பரன் தான் நம்முடனே
Verse 7அன்றன்றுள்ள தேவை தந்து
ஆதரிப்பாரே – என்றென்றும்
துதிகனமும் மகிமையவர்க்கே
இயேசு மகிபனாமவர்க்கே
Verse 1vazhi nadaththum valla dhevan
vaazhvil naayagane vaazhvil naayagane
nam thaazhvil naayagane
Verse 2paradhesap pirayaanigale naam
vaazhum paarinile - paramaanandhaththode
selvom - paraman naattirke
yesu paran tham veettinirke
Verse 3pogum vazhiyaik kaatti nalla
bodhanai seyvaar - egum suththar
meedhu kangal iruththi nadaththuvaar
yesu thiruththi nadaththuvaar
Verse 4andhakaara sakthigal emmai
anugidaamale - sondhamaana
tham janaththai soozhnthu kaappaare
yesu thunaiyaai nirpaare
Verse 5vaadhai noigal vanthunbangal
varuththiya podhum - paadhaiyil
naam sorndhidaamal balappaduththiduvaar
yesu thidappaduththiduvaar
Verse 6kaadaanallum medaanaallum kadanthu
sendriduvom - paadaanallum
paadi selvom paravasamudane
yesu paran thaan nammudane
Verse 7andrandrulla thevai thanthu
aadharippaare - endrendrum
thudhikanamum magimaiyavarkke
yesu magibanamaavarkke
Download Song