Verse 1வாழ்த்துகிறேன் இயேசு ராஜா
வாழ்த்துகிறேன் இக்காலையிலே
அற்புதமாய் இரா முழுவதும்
அடியேனைக் காத்தீரே
Verse 2உமது சேட்டை நிழலதிலே படுத்திருந்தேன் இரா முழுவதும்
உமது கரம் அணைத்திடவே ஆறுதலாம் நித்திரையும் – வாழ்த்துகிறேன்
Verse 3நித்திரையை இன்பமாக்கிப் பத்திரமாய் இருதயத்தைச்
சுத்தமான இரத்தத்திற்குள் சுத்தமாக வைத்திருக்கிறீர் – வாழ்த்துகிறேன்
Verse 4பலவிதமாம் சோதனைகள் எமைச்சூழ வந்திருக்கும்
ஒன்றும் எமை அணுகாமல் அன்புடனே பாதுகாத்தீர் – வாழ்த்துகிறேன்
Verse 5சந்திப்பீரே இக்காளைதனில் தந்திடவே திருவரங்கள்
சந்தோஷமாய்ப் பகல் முழுவதும் ஆவிக்குள் யான் பிழைக்க – வாழ்த்துகிறேன்
Verse 6தந்திடுவீர் அபிஷேகம் புதிதாக இப்புதுநாளில்
நடத்திடுவீர் ஆவியினால் உமது திருசித்தமதில் – வாழ்த்துகிறேன்
Verse 7பாவமொன்றும் அணுகிடாமல் பைசுத்தமாய்ப் பாதை செல்லத்
தேவையான சர்வாயுதங்கள் தாரும் ஜெப ஆவியுடன் – வாழ்த்துகிறேன்
Verse 8படைக்கிறேன் என் இருதயத்தைப் பலிபீடத்தில் முற்றுமாக
கண்களுடன் செவியோடு வாயும் கையும் காலுமாக – வாழ்த்துகிறேன்
Verse 9செய்வேன் யான் எப்போதும் உம சித்தமே ஆசையுடன்
ஒழித்திடுவேன் வீண் வார்த்தை பேசிடுவேன் உம் – வாழ்த்துகிறேன்
Verse 10என்னைக்கான்போர் உம்மைக்கான உம் சாயல் எனில் வேண்டும்
தந்திடுவீர் தாழ்மையையும் பொறுமையுடன் அன்புமாக – வாழ்த்துகிறேன்
Verse 11நேசரே உம் திருவருகை இந்நாளில் இருந்திடினும்
ஆசையுடன் சந்திக்கவே ஆயத்தமாய் வைத்துக் கொள்ளும் – வாழ்த்துகிறேன்
Verse 1vaazhththukiren yesu raajaa
vaazhththukiren ikkaalaiyile
arputhamaai raa muzhuvathum
atiyenaik kaaththeere
Verse 2umathu settai nizhalathile paduththirunthen raa muzhuvathum
umathu karam annaiththidave aaruthalaam niththiraiyum – vaazhththukiren
Verse 3niththiraiyai inbamaakkip paththiramaai iruthayaththaich
suththamaana iraththaththirkul suththamaaga vaiththirukkeer – vaazhththukiren
Verse 4palavithamaam sothanaigal emaichchuzha vanthirukkum
ondrum emai anugaamal anbudane paathukaaththeer – vaazhththukiren
Verse 5santhippeere ikkaalaithanil thanthidave thiruvarangal
santhoshamaaip pagal muzhuvathum aavikkul yaan pizhaikka – vaazhththukiren
Verse 6thanthiduveer apishekam puthithaaga ipputhunaalil
nadaththiduveer aaviyinaal umathu thirusiththamathil – vaazhththukiren
Verse 7paavamondrum anugidaamal paisuththamaaip paathai sellath
thevaiyaana sarvaayuthangal thaarum jeba aaviyudan – vaazhththukiren
Verse 8padaikkiren en iruthayaththaip balipeedaththil muttumaaga
kannkaludan seviyodu vaayum kaiyum kaalumaaga – vaazhththukiren
Verse 9seiveen yaan eppothum uma siththame aasaiyudan
ozhiththiduveen veen vaarththai pesiduveen um – vaazhththukiren
Verse 10ennaikkaanpor ummaikkaana um saayal enil vendum
thanthiduveer thaazhmaiyaiyum porumaiyudan anbumaaga – vaazhththukiren
Verse 11nesare um thiruvarugai innaalil irunthidinum
aasaiyudan santhikkave aayaththamaai vaiththuk kollum – vaazhththukiren
Download Song