Verse 1வாழ்த்துகிறேன் இயேசு ராஜா
வாழ்த்துகிறேன் இக்காலையிலே
அற்புதமாய் இரா முழுவதும்
அடியேனைக் காத்தீரே
Verse 2உமது செட்டை நிழலதிலே
படுத்திருந்தேன் இரா முழுவதும்
உமது கரம் அணைத்திடவே
ஆறுதலாம் நித்திரையும் - வாழ்த்து
Verse 3நித்திரையை இன்பமாக்கிப்
பத்திரமாய் இருதயத்தைச்
சுத்தமான இரத்தத்திற்குள்
சுத்தமாக வைத்திருந்தீர் - வாழ்த்து
Verse 4பலவிதம் சோதனைகள்
எமைச் சூழ வந்திருந்தும்
ஒன்றும் எனை அணுகாமல்
அன்புடனே பாதுகாத்தீர் - வாழ்த்து
Verse 5சந்திப்பீர் இக்காலைதனில்
தந்திடவே திருவரங்கள்
சந்தோஷமாய்ப் பகல் முழுவதும்
ஆவிக்குள் யான் பிழைக்க
Verse 6தந்திடுவீர் அபிஷேகம்
புதிதாக இப்புவி நாளில்
நடத்திடுவீர் ஆவியினால்
உமது திருசித்தமதில்
Verse 7பாவமேதும் அணுகாமல்
பரிசுத்தமாய் பாதை செல்ல
தேவையான சரிவாயுதங்கள்
தாரும் ஜெப ஆவியுடன்
Verse 8படைக்கிறேன் என் இருதயத்தை
பலிபீடத்தில் முற்றுமாக
கண்களுடன் செவியோடு
வாயும் கையும் காலுமாக
Verse 9நேசரே உம் திருவருகை
இந்நாளில் இருந்திடினும்
ஆசையுடன் சந்திக்கவே
ஆயத்தமாய் வைத்துக்கொள்ளும்
Verse 1vaazhththukiren yesu raajaa
vaazhththukiren ikkaalaiyile
arputhamaai raa muzhuvathum
atiyenaik kaaththeere
Verse 2umathu settai nizhalathile
paduththirunthen raa muzhuvathum
umathu karam annaiththidave
aaruthalaam niththiraiyum - vaazhththu
Verse 3niththiraiyai inbamaakkip
paththiramaai iruthayaththaich
suththamaana iraththaththukkul
suththamaaga vaiththiruntheer - vaazhththu
Verse 4palavidham sodhanaigal
emaich soozha vanthirunthum
ondrum enai anugaamal
anbudane paathukaaththeer - vaazhththu
Verse 5santhippeer ikkaalaithanil
thanthidave thiruvarangal
santhoshamaaip pagal muzhuvathum
aavikkul yaan pizhaikka
Verse 6thanthiduveer apishegam
puthithaaga ippuvi naalil
nadaththiduveer aaviyinaal
umathu thirusiththamathil
Verse 7paavamedhum anugaamal
parisuththamaai paathai sella
thevaiyaana sarivaayuthangal
thaarum jeba aaviyudan
Verse 8padaikkiren en iruthayaththai
paleepeedaththil muttumaaga
kannkaludan seviyodu
vaayum kaiyum kaalumaaga
Verse 9nesare um thiruvarugai
innaalil irunthidinum
aasaiyudan santhikkave
aayaththamaai vaiththukkollum
Download Song