Verse 1வேறு ஜென்மம் வேணும், – மனம்
மாறுதலாகிய உள்ளத் தூய்மை என்னும்.
Verse 2கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின்
தேறுதலான விண்பேறு பெற இங்கே; – வேறு
Verse 3பாவசுபாவமும் ஜீவியமும் மாறத்
தேவனின் சாயலை மேவுவதாகிய; – வேறு
Verse 4மானிடரின் அபிமானத்தினாலல்ல,
வானவரின் அருள் தானமாக வரும்; – வேறு
Verse 5ஒன்றான ரட்சகர் வென்றியதை நம்பி,
மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய; – வேறு
Verse 6மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே,
சொந்த மகன்தனைத் தந்த பிதா அருள்; – வேறு
Verse 7மண்ணினில் பத்தராய் நண்ணி நடக்கவும்,
விண்ணினில் தூயராய் தண்ணளி கொள்ளவும்; – வேறு
Verse 1veru jenmam venum, - manam
maaruthalaagiya ullath thooimai ennum.
Verse 2kooru parisuththar maarilaa devanin
theruthalaana vinperu pera inge; - veru
Verse 3paavasubhaavamum jeeviyamum maarath
devanin saayalai mevuvathaagiya; - veru
Verse 4maanidarin abhimaanaththinaalalla,
vaanavarin arul thaanamaaga varum; - veru
Verse 5ondraana ratchagar ventriyathai nambi,
mandraaduvorukku ondruvathaagiya; - veru
Verse 6mainthar kedaamal uganthu eederaave,
sontha maganthanai thantha pithaa arul; - veru
Verse 7manninil paththaraai nanni nadakkavum,
vinninil thooyaraai thannalli kollavum; - veru
Download Song