Verse 1வியாதியஸ்தர் மாலையில்
அவஸ்தையோடு வந்தனர்;
தயாபரா உம்மண்டையில்
சர்வாங்க சுகம் பெற்றனர்.
Verse 2பற்பல துன்பம் உள்ளோராய்
இப்போதும் பாதம் அண்டினோம்
பிரசன்னமாகித் தயவாய்
கண்ணோக்குவீரென்றறிவோம்
Verse 3விசாரம் சஞ்சலத்தினால்
அநேகர் கிலேசப்பட்டனர்;
மெய்பக்தி அன்பின் குறைவால்
அநேகர் சோர்வடைந்தனர்.
Verse 4உலகம் வீண் என்றறிந்தும்
பற்றாசை பலர் கொண்டாரே;
உற்றாரால் பலர் நொந்தாலும்
மெய்நேசர் உம்மைத்தேடாரே.
Verse 5மாசற்ற தூய தன்மையை
பூரணமாய்ப் பெறாமையால்
எல்லோரும் சால துக்கத்தை
அடைந்தோம் பாவப் பாசத்தால்.
Verse 6ஆ கிறிஸ்துவே மன்னுருவாய்
மா துன்பம் நீரும் அடைந்தீர்;
எப்பாடும் பாவமும் அன்பாய்
ஆராய்ந்து பார்த்து அறிவீர்.
Verse 7உம் வார்த்தை இன்றும் பலிக்கும்;
நீர் தொட்டால் சொஸ்தம் ஆவோமே
ஆரோக்கியம் எல்லாருக்கும்
இம்மாலை தாரும் இயேசுவே.
Verse 1viyaadhiyasthar maalaiyil
avasthaiyodu vandhanar;
dhayaaparaa ummandaiyil
sarvaanga sugam petranar.
Verse 2parpala thunbam ulloraai
ippodhum paadham andinom
pirasannamaagith dhayavaai
kannokkuveerendrarivom
Verse 3visaaram sanjalaththinaal
anegar kileesappattanar;
meybhakthi anbin kuraivaal
anegar sorvadaindhanar.
Verse 4ulagam veen endrarindhum
patraasai palar kondare;
utraaraal palar nondhaalum
meynesar ummaiththedaare.
Verse 5maasatra thooya thanmaiyai
pooranamaaip peraamaiyaal
ellorum saala thukkaththai
adaindhom paavap paasaththaal.
Verse 6aa kiristhuve mannuruvai
maa thunbam neerum adaindheer;
eppaadum paavamum anbaai
aaraaindhu paarththu ariveer.
Verse 7um vaarththai indrum palikkum;
neer thottaal sostham aavome
aarokkiyam ellaarukkum
immaalai thaarum yesuve.
Download Song