யாரிலும் மேலான அன்பர்
மா நேசரே;
தாய்க்கும் மேலாம் நல்ல நண்பர்
மா நேசரே;
மற்ற நேசர் விட்டுப் போவார்
நேசித்தாலும் கோபம் கொள்வார்
இயேசுவோ என்றென்றும் விடார்
மா நேசரே!
Verse 2
என்னைத்தேடி சுத்தஞ்செய்தார
மா நேசரே;
பற்றிக்கொண்ட என்னை விடார்
மா நேசரே!
இன்றும் என்றும் பாதுகாப்பார்
பற்றினோரை மீட்டுக்கொள்வார்
துன்ப நாளில் தேற்றல் செய்வார்
மா நேசரே!
Verse 3
நெஞ்சமே நீ தியானம் பண்ணு
மா நேசரை;
என்றுமே விடாமல் எண்ணு
மா நேசரை;
எந்தத் துன்பம் வந்தும் நில்லு;
நேரே மோட்ச பாதைச் செல்லு
இயேசுவாலே யாவும் வெல்லு
மா நேசரே!
Verse 4
என்றென்றைக்கும் கீர்த்தி சொல்வோம்
மாநேசரே
சோர்வுற்றாலும் வீரங் கொள்வோம்
மா நேசரே
கொண்ட நோக்கம் சித்தி செய்வார்
நம்மை அவர் சேர்த்துக்கொள்வார்
Verse 1
yaarilum melaana anbar
maa nesare;
thaaykkum melaam nalla nanbar
maa nesare;
matra nesar vittup povaar
nesitthaalum kobam kolvaar
yesuvo endrendrum vidaar
maa nesare!
Verse 2
ennaithedi suththam seithaara
maa nesare;
patrikkonda ennai vidaar
maa nesare!
indrum endrum paathukaappaar
patrinorai meettukkolvaar
thunba naalil thetral seyvaar
maa nesare!
Verse 3
nenjame nee dhiyaanam pannu
maa nesarai;
endrume vidaamal ennu
maa nesarai;
entha thunbam vanthum nillu;
nere motcha paathai sellu
yesuvaale yaavum vellu
maa nesare!