யேகோவா நிசி யேகோவா நிசி
யேகோவா நிசியை யேகோவா நிசியை
ஏற்றிப் பாடுவோம்;
எங்கள் கொடி வெற்றிக் கொடியே (2)
Verse 2
வீறுகொண்டெழுவீர் இயேசு வீரரே மாறுகொண்டு மன்னர் முன்னே செல்கிறார் சீறியெழும் சிங்கங்கள் நாம் அல்லவோ
மீறும் எதிரி சதிகளுக்கு மிரளவா
ய+தசிங்கம் யுத்தசிங்கமே (2)
Verse 3
கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே
கைகளைத் தளர்த்திடாமல் தாங்கியே
கர்த்தர் இயேசு சத்ய ஆவி நிற்கிறார்
கர்த்தர் வல்ல யுத்த வீரரே (2)
Verse 4
சத்ரு வெள்ளம் போல ஏறி வருகின்றான்
சத்ய ஆவி வேகம் கொடியை ஏற்றுவார்
கோலியாத்தின் வேஷம் இங்கே செல்லுமா?
கோஷமிடும் இளைஞரின் முன் நில்லுமா?
கர்த்தர் நாமம் வல்ல கோட்டையே (2)
Verse 5
ஆவியில் நிறைந்து ஜெபம் செய்வோமே ஆயுதங்கள் அணிந்து களம் செல்வோமே ஆர்ப்பரித்தலங்கமதை வீழ்த்தியே
ஆவிகளின் சேனைகளை வெல்வோமே
கொடிகள் ஏந்தும் படைகள் அல்லவோ(2)
Verse 6
நமக்கிருக்கும் இந்த பெலன் போதுமே
நாதன் இயேசு அனுப்புவதால் போவோமே
பட்டயமோ புயபலமோ தேவையா?
பரம தேவ ஆவி நம்மில் இல்லையா?
ஜீவதேவ சேனையல்லவோ? (2)
Verse 7
முடிந்ததென்று முழங்கி நிற்கும் வீரனே
முற்றும் அவனை முறியடித்த தீரனே
சிலுவையில் சிரம் நசித்த சீலனே
சிலுவைக் கொடியை ஏற்றும் தேவ பாலனே
வெற்றி வாகை சூட்டிப் பணிகிறோம்(2)