உமது மைந்தன் தெளிவாக
இவ்வேண்டுதலைச் செய்யச் சொன்னாரே.
அத்தாலே எங்கும் தாழ்மையாக
உமது பிள்ளைகள் உம்மிடமே
சேர்ந்தும்மைக் கருத்தாக நித்தமும்
மன்றாடிக் கேட்பதைத் தந்தருளும்.
Verse 4
உமது மைந்தனே கற்பித்த
இவ்விண்ணப்பத்தைத் தள்ளப் போவீரோ
உமது ஆவி போதித்த
மன்றாட்டும்மாலே கேட்கப்படாதோ
ஏன் நாங்கள் செய்யும் இந்த ஜெபமே
உமது ஆவியால் உண்மானாதே.
Verse 5
அநேக சாட்சிகளைத் தந்து
நற்செய்தி எங்கும் கூறப் பண்ணுமேன்
சகாயராய் விரைந்து வந்து
பிசாசின் ராச்சியத்தைத் தாக்குமேன்.
நீர் மகிமைப்பட எத்தேசமும்
உமது ராச்சியம் பரம்பவும்.
Verse 6
உமது சுவிசேஷம் ஓடி
பரம்பி எங்கும் ஒளி வீசவே
அஞ்ஞானிகளின் கோடாகோடி
அத்தாலே தீவிரித்தும்மிடமே
வரக்கடாட்சித் திஸ்ரவேலையும்
உமது மந்தையில் சேர்த்தருளும்.
Verse 7
நமதிருதயத்துக் கேற்ற
நல் மேய்ப்பரை அனுப்புவோம் என்றீர்.
உமது வாக்கை நிறைவேற்ற
மகா உட்கருத்தாயிருக்கின்றீர்.
எங்கள் மன்றாட்டு நிறைவேறிப்போம்.
என்றையமற ஆமேன் என்கிறோம்.